லென்ஸ்

வெற்றிமாறன் தயாரிப்பில் வெறும் திரைப்பட விழாக்களில் வலம் வந்து கொண்டிருந்த படம். பல விஞ்ஞான முன்னேற்றங்கள், புதிய கண்டுபிடிப்புகள், மேல் நாட்டு தரத்தில் மேட்டுக்குடி வாழ்க்கை, எங்கு திரும்பினும் செல்ஃபி, டப்ஷ்மாஷ்ன்னு வேறு எதோ உலகத்தை நோக்கி நாம் பயணப்பட்டுக்கொண்டு இருக்கிறோம். இணையம்!!! நம் கைகளால் நமக்கு தெரியாமல் நம் கழுத்தை நெறிக்கும் ஒரு சாத்தான். அதில் உள்ள நன்மை தீமைகளை தெரியாமல் சரட்டுமேனிக்கு பயன்படுத்தும் போது ஏற்படும் ஒரு விபரீதம் ஒருவனை, அவன் சார்ந்த ஒரு குடும்பத்தை எப்படி பாதிக்கிறது என்பதை நெற்றி பொட்டில் நிறுத்தி சொல்கிறது லென்ஸ்.

3 முக்கிய கதாபாத்திரங்கள், 4 துணை கதாபாத்திரங்கள், படம் முழுக்க 2பேரின் சம்பாஷணைகள், இணைய உலகத்தின் ஆகப்பெரிய பிரச்சனை, அதை கையாண்ட விதத்திற்கு இயக்குனருக்கு சபாஷ் போடலாம். பாத்திரப்படைப்புக்கு அந்த ஏஞ்சல் ஒரு பாத்திரமே போதும்.

ஜெயப்ரகாஷ் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் திரும்ப அவருக்கே வினையாய் வருவது, திரைக்கதை ஸ்பெஷல்.
“உயிரோட இருந்தப்ப அவ பேசல, ஆனா இப்ப அவ அலர்ற சத்தம் என் காதுல கேட்டுட்டே இருக்குடா”, “உங்க சபலத்துக்காக என் குடும்பத்தை அழிச்சிடீன்களேடா”, “மத்தவங்க முன்னாடி தான் மனுஷன் அதிகமா நடிப்பான்”
என்பது போல பல வசனங்கள் சுளீர். ஏஞ்சல் பேப்பரில் எழுதி காட்டும் ஒரு ஒரு வசனமும் நம் மனதில் ஒரு அழுத்தத்தை தருகிறது.

பல நேரங்களில் டாக்குமெண்ட்ரி படம் பாக்குற உணர்வை தருகிறது. அங்கங்கு வரும் லாஜிக் சறுக்கல்கள், நம் மனதில் ‘ஏன் இப்படி?’ என்று ஏற்படும் பல கேள்விகள்ன்னு சில நெகட்டீவ்ஸ் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், தெரியாத முகங்களுடன் ஆன்லைன் சாட், டெக் உலகில் அடுத்தவரை வேவு பார்ப்பது எனப்பல விஷயங்களை பற்றி படம் நம் காலரை பிடித்து கேள்வி கேட்கிறது. முகம் தெரியாத நண்பர்களை சமூக வலைத்தளங்களில் தேடி அலையும் இக்கால தலைமுறைக்கு கேட்கும் வண்ணம் உரக்க அடிக்கிறது எச்சரிக்கை மணி…  படத்தில் வரும் ஒரு வசனம் – ‘இந்த வீடியோ பாக்றவங்க, இனி வீடியோ எடுக்குறதுக்கும், அப்லோட் பண்றதுக்கும் பயப்படணும்’ – இந்த உணர்வை அனைவருக்கும் கொடுத்ததில் வெற்றி பெறுகிறது படம்.

லென்ஸ்- சின்ன விஷயம் மாதிரி தான் தோன்றும், இதன் வழி பார் அதன் பூதாகாரம் தெரியும்

அடுத்த படத்தில் சந்திப்போம்,

அன்புடன்,
பிரதீப்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s