14 நாட்கள்

சுஜாதாவின் 100 பக்கமே உள்ள ஒரு கதை. 1972 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானிற்கும் நடந்த 14 நாள் போரை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கதை. இந்திய விமானப்படை ஸ்க்வார்டரன் லீடர் குமார் கிழக்கு பாகிஸ்தானான பங்களாதேஷில் குண்டு வீச செல்கிறான். அவனது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு எதிரிகளின் முகாமில் சிறைபிடிக்கப்படுகிறான்.

இந்தியர்களை முழுவதுமாக வெறுக்கும் ஒரு பாகிஸ்தானிய ராணுவ அதிகாரியிடம் மாட்டிக்கொள்ளும் அவன் கதி என்ன ஆகிறது என்பதை சுஜாதா அவர் பாணியில் 102 ஆவது பக்கம் வரை விறு விறுப்பாக சொல்கிறார். 14 நாளும் போரும், தந்திரங்களும், தளவாடங்களும் பற்றியே பேசும் சுஜாதாவின் இந்நாவலின் மையக்கருத்து யுத்தம் அல்ல. போர்வீரனாக இருந்தாலும் ஒரு மனிதத்தன்மை வேண்டும் என்பதை இக்கதை பறைசாற்றுகிறது. யுத்தம் நடக்கும் போது, பாகிஸ்தானியர்கள் நம் எதிரிகளே, ஆனால் நம்மிடம் அவர்கள் கைதியாய் இருந்தால், அவர்களை எப்படி உபசரிக்க வேண்டும் என்பதை, பாகிஸ்தானியர் ராணுவ அதிகாரி ஒருவர் இந்தியர்களை கண்டு வியக்க வைப்பது சுஜாதா டச்.

சுஜாதாவின் கற்பனை திறன், காட்சி விளக்கம் எதிலும் குறை வைப்பவர் அல்ல. நம்மை யுத்தத்திற்கு அழைத்து செல்கிறார். இந்திய தளவாடங்கள் கூடவே நாமும் பயணிக்கிறோம். நம் காலடியிலும் எதாவது கண்ணி வெடி இருக்குமோ என்று சில சமயங்களில் தோன்றுகிறது.

மேலே குமார் விமானத்தில் பறந்து செல்லும் போது, எதிரிகளின் விமானம் பற்றியும், தனது மனைவி மஞ்சு பற்றியும் மாறி மாறி யோசிக்கும் வரிகள் அட்டகாசம். எப்படி சுஜாதாவிற்கு இவ்வளவு விஷயங்கள் தெரிகிறது என்று நம்மை திகைக்க வைக்கிறது. இந்திய விமானப்படை பயிற்சி விவரங்கள், தளவாட பொருட்கள், கமாண்டோ பிரிவின் பெயர்கள், எதிரி நாட்டு போர் விமானங்கள், அதன் வகைகள், ரைஃபிள் பிரிவுகள், நீள உயரங்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

பாகிஸ்தானியர்கள் குமாரை தலைகீழாக தொங்கவிட்டு அடிப்பார்கள். தலைக்கு ரத்தத்தின் பாய்சசல் அதிகமாக இருப்பதால் அவனின் மூச்சு முட்டும். இதைப்போல் குமார் ராணுவ பயிற்சியின் போது சில பயிற்சிகள் எடுத்திருக்கிறான். அதன் பெயர் லூப்-தி-லூப். ஆனால் அது வெறும் 10 நிமிட பயிற்சியே. ஆனால், இவனை 1 நாள் இரவு முழுவதும் தொங்க விட்டதால் அவனால் தாங்க முடியாமல் மூர்ச்சையானான். நான் இதை படித்து பிரமித்து விட்டான். எப்படி ஒருவரால் ராணுவ பயிற்சிகளை பற்றியெல்லாம் விஷயம் சேகரிக்க முடிகிறது என்று. வெறும் 100 பக்க கதைக்காக அவர் மெனக்கிட்டு இருப்பதை நினைத்தால் நமக்கு மிஞ்சுவது வெறும் பிரமிப்பே. இந்த விஷயத்தில் சுஜாதவிற்கு இணை சுஜாதாவே.

ஐயோ…!!! குமார் இறந்துவிட்டானே என்று திடுக்கிடும் நமக்கு, சுஜாதா தரும் ட்விஸ்ட்… அற்புதம்…!!! அந்த குமாரின் (பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஒரு விமானி) உண்மை கதையோ என்று யோசிக்கத் தோன்றுகிறது.

அடுத்த புத்தகமும் சுஜாதாவோடது தான்… ‘தோரணத்து மாவிலைகள்’…

மீண்டும் சந்திக்கிறேன்,

அன்புடன்,
பிரதீப்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s