ஒரு கிடாயின் கருணை மனு

ஒரு கிடாயின் கருணை மனு – தமிழ் மண் மணம் மாறாத ஒரு கிராமத்து மக்கள் நிறைஞ்ச ஒரு படம். கல்யாணம் ஆனா, குல தெய்வத்துக்கு ஒரு கிடாயை பலி கொடுக்குறோம்ன்னு வேண்டிகிட்ட ஹீரோ, தன்னோட மனுஷ மக்களோட குல சாமி கோவிலுக்கு ஒரு லாரில போறாரு. போற எடத்துல ஒரு பெரிய விபரீதம் நடந்துருது. அது என்ன பிரச்சனை, அதுல இருந்து எல்லாரும் எப்படி வெளிய வந்தாங்கங்கிறது தான் கதை.

கழுகு பார்வையில் கேமரா என்று கேள்வி பட்டு இருப்போம், ஆனா ஒரு கிடாவின் பார்வையில் கேமராவுடம் படம் ஆரம்பிக்குது. படத்துல நடிச்சிருக்குற எல்லாரும் பக்கா கிராமவாசிகளின் பிரதிபலிப்பு. நக்கல், நய்யாண்டி, கிராமத்து பாணி வசன கேலிகள்ன்னு நாமே அவுங்களோட இருக்குற உணர்வை தருது. கொண்டி, பாழாப்போன அரும்பாடு, சமயக்காரன் சேவலு, கசாப்புக்கடை பல்லாண்டி, ஊர் முழுங்கி, குஞ்சி கரி, வெண்கலத்தொண்டைன்னு ஒவ்வொரு கேரக்ட்டர்க்கும் உள்ள பெயரும் நம் மனசுல நிக்குது. குற்ற உணர்வில் மாட்டிக்கொண்டு தவிப்பது, செய்த தவறை இறுதியில் ஒப்புக்கொண்டு மன்றாடுவதுன்னு ராமமூர்த்தியாகவே மாறியிருக்கிறார் விதார்த். தன் கணவனே எல்லாவற்றிற்கும் காரணம் என்ற பரிதவிப்புடன் இருக்கும் கனமான கதாபாத்திரம் ஹீரோயின் ரவீணாவிற்கு.

சமயக்காரன், கிடாய் வெட்ட வந்தவன், லாரி ஓனர், ட்ரைவர், எல்லாத்தையும் சகட்டுமேனிக்கு ஓட்டுற விதார்த்தின் நண்பர்கள் கூட்டம்ன்னு படம் முழுக்க சுத்தி வருது. அந்த சம்பவம் நடந்த பிறகு, படம் முடிவு வரை சுவாரசியம் குறையாம நகருது. ஆனா கேமரா அதே எடத்துல இருக்குற நால கொஞ்சம் சலிப்பு தட்டுது. இதமா ரகுராம் இசைல ரெண்டு பாட்டுமே பொட்டக்காட்டுல சாரல் மழை.

ஒரு பிரச்சனைனா அப்படி தனியா ஒருத்தன விட்டுட்டு போயிரமாட்டாங்க கிராமத்து மக்கள்ன்னு சொன்ன விதம் ஓகே, ஆனா கிராமத்து மனிதர்களை இத்தனை அறமற்றவர்களாக காட்டுனது தான் கொஞ்சம் நெருடல்.

ஒரு கிடாயின் கருணை மனு – ஜனாதிபதி ஒப்புதல் வாங்கியது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s