என்ன படிக்கலாம்

​#Education #WhatToStudy

தினசரி தொலைக்காட்சில பார்குற கல்வி சார்ந்த விளம்ப்ரத்துனால எனக்கு ஒரு சந்தேகம். நாம எதுக்காக படிக்கிறோம். அறிவுக்காகவா இல்ல பணத்துக்காகவா. கடைசில எல்லாரும் பணம் பண்ணனும்னு ஒரு புள்ளிய நோக்கி தான் நகர்றோம்ங்கறது ஒரு பக்கம் இருக்கட்டும், ஆனா அறிவுங்கற விஷயத்த பத்தி நாம சிந்திக்கிறதே இல்லையோனு தோணுது. விருப்பப்ட்டு தான் நம்ம கல்வி வழிய நாம தேர்ந்து எடுக்குறோமா? இல்ல பணமும், மதிப்பெண்ணும் மட்டும் அதே முடிவு பண்ணுதா.
பத்தாம் வகுப்பு படிச்சு முடிச்ச உடனே கணினி அறிவியல் பிரிவோ இல்ல உயிரியல் பிரிவோ இல்ல வணிக்கணிதம் பிரிவோ இல்ல வரலாறோ இல்ல மனையியல் பிரிவோ நாம தேர்வு செய்றத எந்த காரணி முடிவு பண்ணுது. உயிரியியல் படிக்கிற எல்லாரும் மருத்துவர் ஆகணுங்கற ஒரு நோக்குல தான் படிக்கிறாங்களா? 

சரி பொறியியலுக்கு வருவோம். 12ஆம் வகுப்பு முடிஞ்சு பொறியியல் சேரணும்னு நினைக்குற நாம முதல்ல தேர்ந்தெடுக்க வேண்டிய காரணி பிடித்த பாடத்தையா இல்ல கல்லூரியின் வேலை வாங்கி தரக்கூடிய திறனையையா?
படிப்புல உயர்ந்த படிப்பு தாழ்ந்த படிப்புன்னு ஒன்னும் இல்ல. வேலை உத்திரவாதங்க்றதுக்காக எப்படி விருப்பப்படாத ஒரு பாடத்த படிக்க முடியும்? தாய்மொழில படிச்சா நம்ம சிந்தனை மேலோங்கி இருக்கும்ன்னு தமிழக அரசு பொறியியலையே தாய் மொழி கல்வில கொடுக்குது. ஆனா விருப்பப்படாத பாடத்த தேர்ந்து எடுக்குற மாணவனோட அறிவு சார்ந்த சிந்தனை ஓட்டம் எப்படிக்கூடும்?
மாணவர்கள கவர்ரதுக்கு கல்வி நிறுவனங்கள் போடக்கூடிய விளம்பரங்கள் பார்த்தா சிரிப்பு தான் வருது. ஒரு நாட்டோட, சமூகத்தோட முன்னேற்றத்துக்கு ஒரு ஒரு கல்வி நிறுவனத்துக்கு பங்கு இருக்க இல்லையா? எனக்கு தெரிஞ்சு நான் யாரையும் பி.எல் படிக்க போறேன்னு சொல்லிக்கேட்டதே இல்லை. நாட்டுல சுமார் 3 கோடிக்கும் மேலான வழக்கு நிலுவைல இருக்குதாம். வேலை மட்டும் தான் குறிக்கோளா வச்சி படிக்கிறோம்னா ஏன் சட்டம் படிக்க யாரும் முன் வரது இல்ல. 
அப்போ  நம் சமூகத்துல விருப்பப்பட்டு யாரும் பாடத்த தேர்ந்து எடுக்குறது இல்லையா(பெரும்பான்மையாக). இந்த பாடத்துல பட்டம் பெற்றால் வேலை கிடைக்குமா? இந்த ஒரே ஒரு விஷயம் மட்டும் தான் நம்மோட கேள்வியாக, சிந்தனையாக இருக்கு. இதையும் யார் தீர்மானிக்ரா? மாணவனா இல்ல, பெற்றோரா இல்ல, சொந்தகாரனா இல்ல, பக்கத்து வீட்டு மாமாவா? இந்த மாதிரி யோசனை நமக்கு எப்ப இருந்து வந்தது? இது இந்த தலைமுறையின் சாபமா இல்ல நம் முன் தலைமுறையும் இப்படி தானா?
ஒரு சமூகத்தோட அடுத்த பரிணாமத்த வடிமைக்க ஒரு ஒருவரின் கல்வி ரொம்ப முக்கியம்.  அந்த கல்வி ஒருத்தரோட அறிவு வளர்க்க கூடியதா இருக்கணுமே தவிர, காசை மட்டும் முதல் நிலை படுத்துறதா இருக்கக்கூடாது. 
இப்ப உள்ள இளைஞர் சமூகத்துல, நாம படிச்ச கல்விக்கும், அறிவுக்கும் சம்பந்தம் இருக்கா? அப்படி இல்லனா நாம எந்த சமூகத்த நோக்கி நகர்ந்துட்டு இருக்கோம்?
விடை நம் கையில்….
அன்புடன்,

பிரதீப் #PradeepKumarArunachalam

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s