சினிமாவுக்கு போன சித்தாளு

ஜெயகாந்தன் சிறுகதையாய் எழுத வேண்டும் என்று நினைத்து ஒரு சிறு கதை புத்தகமாக எழுதிய கதை. பெயர் வசீகரமாக இருக்கிறதல்லவா? “ஒரு பெண்…, சித்தாள் வேலை பார்ப்பவள்…, சினிமா பார்க்க போனாள்…!!!” இது தானே தலைப்பிலிருந்து நாம் பெறும் விஷயம்? சரியே… அதை ஒட்டியே அமைகிறது கதை.

இன்னமும் நாம் வலைத்தளங்களில், இரண்டு ஹீரோக்களுக்காக ரசிகர் பட்டாளம் அடித்து கொண்டுதான் இருக்கிறது. முதல் நாள் காட்சிகளை பார்க்க, கூட்டம் அலைமோததான் செய்கிறது. பால் அபிஷேகங்கள் அரங்கேறுகிறன்றன. இதெல்லாம் எதற்காக? நாம் ஏன் இன்னும் இந்த விஷயத்தில் முன்னேறவில்லை? இல்லை, நம்மை முன்னேற விடவில்லை?

நம்மில் இருக்கும் அறியாமையையும், பேதைமையும் சினிமாக்காரர்களால் பயன்படுத்தப்படுகிறது. நம்முடைய அறிவும், மனமும் ரசனையும், ஒழுக்கமும் சிதைந்து போவதற்கு இந்த சினிமா காரர்களே காரணம் என்பதை 40 ஆண்டுகள் முன்னாள் ஜெ.கே அவர்கள் சொல்ல முயற்சித்த கதை தான் இந்த சினிமாவுக்கு போன சித்தாளு.

வெறும் வார்த்தை சூதாடிகள் கருத்து சுதந்திரம் என்ற பேரால் இந்த மக்களின் வாழ்க்கையை சினிமாத்தனப்படுத்திப் பொய்மையில் மூழ்கடிக்கிற கொடுமை நாளும் இங்கு வளர்ந்து வருகிறது என்பதே எழுத்தாளரின் கோபமான வாதம்.

அப்படி ஒரு சினிமா மோகத்தினால் தன் வாழ்க்கையை இழந்த ஒரு நகரத்து கூலிக்கார வர்க்கப்பெண்ணே இக்கதையின் முதன்மை கதாபாத்திரம். அவள் பெயர் கம்சலை. அவள் செய்யும் எந்த செயலையும் ஒரு பார்வையாளனாக நம்மால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவள் செய்யும் எதோ ஒரு செயல் நாமும் நம்மை மறந்து செய்து கொண்டிருந்தாள், கண்டிப்பாக நம்மை அது உறுத்தும். அந்த விதத்தில் ஜெ.கே. எழுத்துக்கள் ஜெயிக்கிறது. கதை முழுக்க மதராஸ் நடுத்தர மக்கள் பேசும் பாஷயே வருகிறது. “என்னாம்மே இப்படி பண்ணிகிண்ணியே… வூட்டாண்டே உன்ன தேடமாட்டங்களா?…” , “வாத்தியார் படம் நீ மட்டும் கண்டுக்கின்னா, பேஜாரா பூடுவே…” இப்படி நம்மையும் அந்த பாஷை பேச வைக்கிறார்.

செல்லமுத்து ஒரு ஆண் ஆதிக்கத் தோரணையில் தெரிந்தாலும், அவன் செய்யும் காரியங்களுக்கு ஞாயம் கற்பிக்க முயல்கிறான்.

சினிமாக்காரர்கள், இது வெறும் பொழுது போக்கு, கொஞ்சம் நேரம் மகிழ்ந்திருத்தல் என்ற ஓட்டை வாதங்களையே ஓயாமல் பதிலாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். நம்முடைய பொழுதுபோக்கும், கொஞ்சம் நேரம் மகிழ்ந்திருத்தலும் ஏன் சீரழிந்து கிடக்கிறது என்றும், ஆதில் சிக்காமல் எப்படி உயர்வு காண்பது என்பதில் கவனம் வேண்டும் என்பதையே ஜெ.கே இதில் சொல்ல முயல்கிறார். 40 ஆண்டுகள் முன்னாள் இருந்த மாதிரி மிகவும் மோசமான நிலை இல்லை என்றாலும், இந்த சினிமா மோகத்தில் நம் வாழ்வில் நாம் சில விஷங்களை இழக்கிறோம் என்பதில் ஜெ.கே வாக்கு இன்று பலிக்கத்தான் செய்கிறது…

அடுத்த புத்தகத்தில் சந்திப்போம்,

அன்புடன்,
பிரதீப்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s