விக்ரம் வேதா

புஷ்பர் காயத்ரி டியோவோட 3 ஆவது படம். முதல் இரண்டு படங்களில் பண்ணாத அத்தனை விஷயத்தையும் இதில் கையாண்டுருக்காங்க. விக்ரமாதித்தன் வேதாளம், இந்த பெயரோடு பாதி தான் படத்தின் தலைப்பு என்கிற சுவாரசியமான விஷயம் டிரைலர் அப்பவே பெரியதாக பேசப்பட்டது. அதே விஷயத்தை, கதை கருவாய் எடுத்ததற்கு இயக்குனருக்கு சபாஷ் போடலாம். புத்தி கூர்மையான விக்ரமாதித்தன், சாமர்த்தியமான வேதாளம் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி, வேதாளத்தை இறுதியில் பிடித்தானா என்பதே கதை. பழைய கதை மாதிரி தெரியுதுல?…

ஓம் ஸ்ரீ தத்வமஸி…

வார இறுதியில், காலையில் என் வீட்டு அருகில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு போவது எனது வழக்கம். பெங்களுரில் உள்ள கேரளவாசிகளால் நடத்தப்படும் கோவில். பெங்களூர் குளிர் காற்றுடன், எப்பவும் சந்தன மனம் கமழும் அருமையான சாஸ்தா கோவில். பொதுவாக, காலை 10 மணிக்குள் கோவிலுக்கு சென்று விடுவேன். காரணம், அதற்கு மேல் சென்றால், பகல் பூஜைகள் ஆரம்பித்து விடும். அதன் பின், ஐயப்பனை அருகில் சென்று தரிசிக்க சுமார் 45 நிமிடங்கள் ஆகும். காரணம், பூஜை ஆரம்பித்த உடன்…