க.பெ அத்தியாயம் ஒன்று

சுஜாதா அவர்களின் கற்றதும் பெற்றதும் முதல்பாகம் வாசித்துக்கொண்டு இருக்கிறேன். பொதுவாக ஒரு புத்தகம் வாசித்து முடித்த உடன் அதை பற்றி எனது கருத்தை, அந்த புத்தகத்தின் முன்னுரை போல் எழுதுவேன். ஆனால், சுஜாதாவின் புத்தகத்திற்கு அப்படி எழுதுவது அவ்வளவு எளிதல்ல. காரணம், நம்மால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு அதில் விஷயங்கள் பொதிந்து கிடைக்கும். அதை நாம் மீண்டும் அசைபோட்டு எழுதுவது கொஞ்சம் கடினமே. அதும், க.பெ ல், அவர் சொல்லும் கருத்துக்கள், எழுத்தாளர்கள், தத்துவங்கள், உபநிஷதங்கள்,…

மெர்சல்

விஜய் அட்லீ கூட்டணியில் இரண்டாவது படம். தெறியில் மெர்சல் காட்டுன விஜய், மெர்சலில் தெறிக்காவிட்டாரா என்பதே மெர்சல். 3 விஜய். 1 விஜய்க்கு வில்லன் துரோகம் பண்றான். பழிவாங்க இன்னும் ரெண்டு விஜய் வராங்க. எதுக்கு பழி வாங்குறாங்க, என்ன துரோகம் என்பதை மெடிக்கல் மாஃபியா மூலமா ஒரு சமூக கருத்தோட சொல்லி இருக்குது இந்த மெர்சல். படத்தோட மொத்த பாரத்தையும் தாங்கி நிக்குற மனுஷன் விஜய் மட்டும் தான். 2 கெட்டப் ல, 3 விஜய் அதகளம்….

கொடக்கோனார் கொலை வழக்கு

எப்படி எனக்கு இந்த புத்தகம் அறிமுகமானது என்பது ஞாபகம் இல்லை. ஆனால், எதற்காகவோ, எனது புத்தகம் வாங்கும் விருப்பப்பட்டியலில் முன் வரிசையிலே இருந்தது. நாவல் நிகழும் நிலத்தின் பண்புகளை மாற்றாமல், பண்பாட்டு மரபைச் சிதைக்காமல், நிறைய வரலாறு பேசினாலும், சமகால நாவலாக எழுதி இருக்கிறார் அப்பணசாமி. புது எழுத்தளார்களின் புத்தகத்தை வாசிக்க ஆரம்பிக்கும் போது ஒரு சிக்கல் உண்டு. முதல் 2,3 பக்கங்களுக்கு அவர்களின் எழுத்து நடை நமக்கு பிடிபடாது. அவர்களின் மொழி நடையை பிடித்து, வாசிப்பிற்குள்…