இரும்புத்திரை

சுமார் 2 மாதம் படம் வெளிய வராம இருந்த நமக்கு, இந்த படம் ஒரு நல்ல அனுபவத்தை தரும்னே சொல்லலாம். நம்ம எல்லாரும் டிஜிட்டல் உலகத்துல இருக்கோம். 50 ஆண்டுகளுக்கு முன்னாடி இரண்டு நாடுகளுக்கு இடையே ஆயுதப்போர் நடந்தது. அதுக்கு பின் பயோ போர் (Biowar), இப்ப நடக்குறது சைபர் போர் (Cyber War). அமெரிக்கால டிரம்ப் ஜெயித்ததுல இருந்தது நம்ம ஆதார் கார்ட் விஷயம் வெளிய சுத்துறது வரை எல்லாமே இதில் அடங்கும்.

என் அக்கௌன்ட்ல இருந்து பணம் திருடு போயிட்டு, ஏ.டி.எம் மூலமா பணம் திருடிட்டாங்க, என்னோட மெயில்க்கு நீங்க 5 லட்சம் ஜெயிச்சிருக்கீங்கன்னு ஒரு மெயில் வந்தது, என் ஃபேஸ்புக் அக்கௌன்ட் யாரோ ஹாக் பண்ணிட்டாங்க, என் ஃபோன் நம்பர் எப்படிடா இந்த பேங்க்கு கிடைச்சுது, எப்படி லோன் வேணுமான்னு கால் பண்றான், இந்த அனைத்துமே நாம தினம் தினம் நம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கிற விஷயம் தான். இது அனைத்தும் சேர்ந்து நம்ம கழுத்தை நெறிக்க ஆரம்பித்தால் என்ன நடக்கும் என்பதை சொல்லுது இந்த படம். டார்க் இன்டெர்நெட் எனப்படும் கருப்பு இணையத்தோட சில கருப்பு பக்கத்தை வெளிச்சம் போட்டு காட்ட முயற்சி பண்ணி இருக்கு.

விஷால், படத்துக்கு நல்ல தேர்வு. பாண்டியநாடு படத்துக்கு அப்பறம் விஷாலுக்கு ஒரு நல்ல படம். நிறைய மெனக்கிடலனாலும், தன்னோட வேலைய ஒழுங்கா செஞ்சி இருக்காரு. கோவப்பட்டு அப்பாவை திட்டும் போதும் சரி, ‘நீ தான் எனக்கு நல்ல அப்பவா இல்ல, நானாவது என் தங்கச்சிக்கு நல்ல அண்ணனா இருந்துருக்கலாம்’ ன்னு கலங்கும் போதும் சரி, இயல்பா இருக்கு. ஆனா, எதுக்கு அவர் ஆர்மி மேஜர் வாராருன்னு தெரில. ஒரு பாட்டுல மட்டும் எல்லாருக்கும் ட்ரைனிங் எடுக்குறாரு.

சைபர் வார் வில்லனா கண்ணுலயே மெரட்டுறாரு அர்ஜுன். வாட்ச்லேயே பல வித்தையை காட்டுறாரு. கதாநாயகிக்கு பெரிய ஸ்கோப் படத்துல இல்லனாலும், அழகா காட்டன் புடைவை கட்டி அழகா வந்துட்டு சிரிச்சிட்டு போறாங்க சமந்தா. படத்தில் ஸ்வீட், கியூட் சமந்தா இருந்தும் ரொமான்ஸ் இல்லையேம்மா. ரோபோ ஷங்கர், விஜய் வரதராஜ் இருந்தும் சிரிப்பு அத்தியாயம் மிஸ்ஸிங்.

நம்முடைய ஒவ்வொருவரின் பெர்சனல் தகவல்களும் ஸ்மார்ட்போன்கள் மூலம் டேட்டாவாக ஒயிட் டெவில், பிளாக் ஏஞ்சல் என டிஜிட்டல் திருடர்கள் கையில் சென்றுகொண்டிருக்கிறது. அவர்களிடமிருந்து ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என டிஜிட்டல் உலகின் ஆபத்தை எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் உண்மைகளாகப் பதிவு செய்திருக்கிறார், அறிமுக இயக்குநர் மித்ரன். அதுக்கே பல லைக்ஸ் ப்ரோ.

இந்த மாதிரி படங்கள்ல தேவை இல்லாம ஒரு ஐட்டம் சாங், ஒரு காதல் அத்தியாயம்ன்னு வைக்காம படம் நேர்கோட்டுல பயணிக்கிறது. ஒய்2கே(Y2K-2000) ப்ராப்லம், டிஜிட்டல் நெட்வொர்க்கிங், ஹேக்கிங், கால் டேப்பிங், மொபைல் டெக்னீக்ஸ் நிறைய விஷயங்களை குழப்பமா சொல்லி இருக்காங்க.

திரைக்கதைல நிறைய இடத்துல படத்தை தொய்வா அமைச்சதுக்கு கொஞ்சம் டிஸ்லைக்ஸ். அர்ஜுன் இருக்காரு படத்துல, அவருக்கு ஃபைட் இல்லனா எப்படின்னு வர அந்த கடைசி ஃபைட்ன்னா தேவையே இல்ல ப்ரோ. விஷால் ஒரு நார்மல் ஹீரோவா மட்டுமே இந்த ஒயிட் டிவில கண்டு பிடிக்குறாரு. ஒரு ராணுவ வீரனா வித்த்யாசமா ஏதும் செய்யாதது பாத்திர படைப்பு மேல கொஞ்சம் வருத்தம்.

யுவன் இசை பெருசா ஏதும் கவரல. ஆனா அர்ஜுனுக்கு வர அந்த பிஜிஎம் வில்லனிசம். 3 ஃபைட்னாலும் திலீப்போட சண்டை பயிற்சில ஒரு ஒரு அடியும் தடாலடி. ஜார்ஜோட ஒளிப்பதிவுல படம் அழகா தெரியுது.

இரும்புத்திரை – டார்க் இன்டர்நெட்டின் முகத்திரை.

சொல்ற விஷயம் இதான் – Cashless India in Careless Indians. Your Information is someone’s wealth.

அடுத்த நல்ல படத்துல சந்திப்போம்,

அன்புடன்,
பிரதீப்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s