துயரத்தில் தமிழகம்!

இன்று தமிழகத்தின் ஒரு சகாப்தம் முடிவடைந்தது. இணையில்லா ஒரு அரசியல் தலைவரை நாடு இழந்து நிற்கிறது. தமிழ்நாட்டை ஒரு வளர்ச்சி பாதைக்கு இட்டு சென்ற பெருந்தகைகளில் ஒருவரை நாம் இழந்து நிற்கிறோம்.  50 ஆண்டுகளாக கட்சியின் தலைமை பொறுப்பு,  சுமார் 60 ஆண்டுகள், 12 முறை தொடர்ந்து  சட்டமன்ற உறுப்பினர் பதவி, 5 முறை தமிழக முதல்வர் என்று அவரின் நீண்ட நெடிய பயணத்தை பட்டியலிடலாம். தமிழக அரசியல் என்ற புத்தகத்தில் தனி ஒரு பெரும் அத்தியாயமாக திகழந்த…