என்னை பற்றி

என்னை பற்றி… ???

நான் எப்படி பட்டவன், என்னோட குணாதிசியங்கள் என்ன என்பதை சொல்ல இந்தப்பக்கத்தை நான் உருவாக்கவில்லை…

வாசிப்பு என்ற பழக்கம் இந்த தலைமுறையிடம் அதிகமாகவே குறைந்து போயிற்று என்பது என்னுடைய வாதம். அதும் புத்தகம் தொட்டு வாசிப்பு என்பது ஒரு மிஷன் இம்பொசிபிளாக தான் இருக்கிறது. அதற்கு காரணமாக உள்ள காரணிகள் சொல்லிக்கொண்டே போலாம். முக்கியமாக, எல்லா பெற்றோரும் D க்கு முன்னாடி E (சென்னை அமிர்தா விளம்பரம் ஞாபகம் இருக்கா?) என்பதை நோக்கி பிள்ளைகளை வளர்த்தல், புத்தக வாசிப்பு என்பதை சொல்லித் தராத ஆசிரியர்கள், கல்வி என்பது அறிவு என்பதை மறந்து போன அரசாங்க கல்வி சார் கொள்கைகள் என்று நீள்கிறது பட்டியல்.

சின்ன வயதில் இருந்தே, வாசிப்பு என்பது என்னோடு ஒன்றாக பயணித்திருக்கின்றது. அந்த அந்த வயதில், அதன் ஆழம் கூடிக்கொண்டே செல்வதை என்னால் உணர முடிகிறது. பள்ளிப் பருவத்தில் வாசிப்பு ஒரு பொழுது போக்கு விஷயம். கல்லூரி காலங்களில், வாசிப்பு என்பது பொழுது போக்கு என்பதைத் தாண்டி ஒரு அறிவின் தேடலாக அறிந்தேன். அதன் தேடல் பாதை தான், சரித்திர நாவல்கள், நவீன இலக்கியங்கள் மீதான பற்று. வேலைக்கு சேர்ந்த காலங்களில் (இன்றும்) புத்தக வாசிப்பு என்பது அறிவின் தேடல் மட்டும் அல்லாமல், எனது ஆளுமையை நான் செதுக்க உதவும் ஒரு உளியாக உணர்கிறேன்.

அந்த அறிவின் தேடலும், ஆளுமையும், என் தமிழை செப்பனிட வேண்டும் என்ற நோக்கமும், என்னை எழுத்து பணிக்கு இட்டுச் சென்றது. அதன் துவக்கம், பார்த்த படங்களுக்கு விமர்சனங்கள் எழுதுவது. இதுவரை அதை யார் யார் படித்தார்கள் என்று தெரியாது. சுமார் 100 படங்களுக்கு மேல் எழுதி இருப்பேன். அது நல்ல பொழுது போக்கும் கூட. அடுத்து, எனக்கு தோன்றும் விஷயத்தை, யோசனையை, சிந்தனையை, 2 வரியாக இருந்தாலும் எழுத துவங்கிய நாட்கள். அதை இன்று வரை எனது குடும்பம், நண்பர்கள் வட்டராத்தில் மட்டும் பகிர்ந்து கொண்டேன்.

அதை பொது தளத்திற்கு கொண்டு செல்ல எடுத்த முயற்சியின் பரிமாணமே இந்த வலைத்தளம். என்னுடைய 8 ஆண்டு கால (2016 ல்) யோசனை, சின்ன சின்ன நகைச்சுவை, சினிமா சுவாரசியங்கள், சினிமா விமர்சனங்கள், கல்வியின் தரம் குறித்த சிந்தனை, பொறியாளனின் கறுப்புப் பக்கங்கள், வாழ்க்கையை குறித்த விடைகள், படித்து ரசித்த வசனங்கள், கட்டுரைகள், நாள், நபர் சிறப்பு பதிவுகள், சமூக வலைதள நிகழ்வுகள், நிலைகள், நான் ரசித்த புத்தகங்களின் முன்னரை என்று மொத்த விஷயத்தின் தொகுப்பே இந்த வலைத்தளம்.

எனது கிறுக்கல் உங்களுக்கு பிடித்து இருந்தால், இந்த பக்கத்தின் கீழே உள்ள பின்தொடரு வழியில் பின்தொடரலாம்…

இந்த முயற்சியில் என் பயணத்தை தொடர்கிறேன்…

அன்புடன்,
பிரதீப்
கிறுக்கல்கள் தொடரும்….

Advertisements

2 Comments Add yours

  1. Esakki says:

    Nice bro… Continue ur good work…

    Liked by 1 person

    1. Ungal anbukum aatharavukum nandri…

      Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s