சுஜாதாவிற்கு ஒரு ட்விஸ்ட்… 

கதை எழுத அனுபவ அறிவு அவசியமா ? -சுஜாதா பெங்களூரில் ஒருநாள் ராத்திரி, ஓர் அன்பர் என்னை சந்திக்க வந்தார். “நீங்கள் எழுதும் எந்தக் கதையையும் போட்டு விடுகிறார்கள். ஆனால், நான் எழுதிய சிறந்த கதைகள் திரும்பி வந்து விடுகின்றன. இவற்றில் என்ன தப்பு என்று ஒருமுறை படித்துவிட்டுச் சொல்லுங்கள். நீங்கள் வேண்டாம் என்று சொன்னால் கதை எழுதுவதை நிறுத்தி விடுகிறேன்.” என்று பை நிறைய வைத்திருந்த கையெழுத்துப் பிரதிகளை எடுத்து மேஜையில் பரப்பினார். நான் அவற்றில்…

க.பெ அத்தியாயம் ஒன்று

சுஜாதா அவர்களின் கற்றதும் பெற்றதும் முதல்பாகம் வாசித்துக்கொண்டு இருக்கிறேன். பொதுவாக ஒரு புத்தகம் வாசித்து முடித்த உடன் அதை பற்றி எனது கருத்தை, அந்த புத்தகத்தின் முன்னுரை போல் எழுதுவேன். ஆனால், சுஜாதாவின் புத்தகத்திற்கு அப்படி எழுதுவது அவ்வளவு எளிதல்ல. காரணம், நம்மால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு அதில் விஷயங்கள் பொதிந்து கிடைக்கும். அதை நாம் மீண்டும் அசைபோட்டு எழுதுவது கொஞ்சம் கடினமே. அதும், க.பெ ல், அவர் சொல்லும் கருத்துக்கள், எழுத்தாளர்கள், தத்துவங்கள், உபநிஷதங்கள்,…

14 நாட்கள்

சுஜாதாவின் 100 பக்கமே உள்ள ஒரு கதை. 1972 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானிற்கும் நடந்த 14 நாள் போரை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கதை. இந்திய விமானப்படை ஸ்க்வார்டரன் லீடர் குமார் கிழக்கு பாகிஸ்தானான பங்களாதேஷில் குண்டு வீச செல்கிறான். அவனது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு எதிரிகளின் முகாமில் சிறைபிடிக்கப்படுகிறான். இந்தியர்களை முழுவதுமாக வெறுக்கும் ஒரு பாகிஸ்தானிய ராணுவ அதிகாரியிடம் மாட்டிக்கொள்ளும் அவன் கதி என்ன ஆகிறது என்பதை சுஜாதா அவர் பாணியில் 102 ஆவது…

சுஜாதா…!!!

இன்று என் இனிய எழுத்தாளனுக்கு பிறந்த நாள். ஒரு பெயர், அதன் பின்னால் நிரந்தர ஆச்சிரியக்குறி… சுஜாதா… ! எனக்கு அலுவலக பிறந்த நாள் () இன்று தான். இன்று சுஜாதாவின் பிறந்தநாள் என்று நான் உணர்ந்த பிறகு தான், இன்று எனக்கும் பிறந்த நாள் என்றே நான் உணர்ந்தேன். இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் எனக்கும் என் இனிய எழுத்தாளனுக்கும்… நான் ரசித்த அவரின் ஒரு நகைச்சுவை துணுக்கு உங்கள் பார்வைக்கு: ஸ்ரீரங்கம் மருத்துவமனை staff…

பிரிவோம் சந்திப்போம் 2

பிரிவோம் சந்திப்போம் 2 – பிரிவோம் சந்திப்போம் முதல் பாகத்தில் மதுவும், ரகுவும் பிரிந்ததாக கதை முடிந்தது. நான் முந்தய பதிவில் சொன்ன மாதிரி, அதன் இரண்டாவது புத்தகம் அவர்கள் மீண்டும் சந்திக்கிறார்கள். பாபநாசத்துல கட் பண்ணி, ஓபன் பண்ண பள பளக்குது நியூயார்க் நகர கென்னடி விமான நிலையம். ரகு (டைப் பண்ணும் போது ராகுன்னு தான் வருது. இங்கயும் அது தொடருதுன்னு தான் சொல்லணும்) தனது மேல்படிப்பிற்காக, அப்பாவின் ஆசைக்காக, ‘தன்னாலயும் வாழ்த்துக்காட்ட முடியும்’, அவர்கள்…

கற்றதும் பெற்றதும் 2

எனது இனிய எழுத்தாளனை நான் கொண்டாட சில உதாரணங்கள்… கற்றதும் பெற்றதும் வரிசையில் 2 ஆவதாக… ஆறு வார்த்தைகளில் ஒரு கதை எழுத முடியுமா என்று ஹெமிங்வே சவால் விட்டு, ‘விற்பனைக்கு – குழந்தைக் காலணிகள், எப்போதும் அணியாதது ‘ (For Sale. Baby Shoes. Never Worn.) என்று எழுதி பிரம்பிக்க வைத்தார். அதைத் தொடர்ந்து ஜான் அப்டைக், நார்மன் மெய்லர் போன்றவர்களும் ஆறு வார்த்தைகளில் கதைகள் எழுதினர். தமிழில் எனக்கு பிடித்த ஆறு வார்த்தை…

எஸ்.ரங்கராஜன் என்கிற நான்…

பிப்ரவரி 27 – எழுத்தாளர் சுஜாதாவின் நினைவுநாள். திருச்சி பெரியகடைத் தெருவில் இயங்கி வந்த `சிவாஜி’ இதழில், ‘எழுத்தில் ஹிம்சை’ என்ற தலைப்பில் சுஜாதா எழுதிய முதல் சிறுகதை வெளியானது. எஸ்.ரங்கராஜன் என்கிற தனது இயற்பெயரில்தான் அந்தக் கதையை எழுதியிருந்தார் சுஜாதா. அப்போது அவருக்கு வயது 18. அதன் பிறகு 12 ஆண்டுகள் கழித்துதான் அவர் மீண்டும் பத்திரிகைகளில் எழுதத் தொடங்கினார். “கதை வெளிவந்தபோது திருச்சி நகரமே அலம்பிவிட்டாற்போல இருந்தது. அந்த வட்டாரத்தில் ‘சிவாஜி’ இதழின் காப்பிகள்…

கற்றதும் பெற்றதும் 1

தனது 70ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு ‘#கற்றதும்_பெற்றதும்’ பகுதியில் #சுஜாதா அவர்கள் எழுதியது: “மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். மெரீனாவில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும் என்னைவிட சின்ன வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள். ஒரு தாத்தா மாட்டினார். நிச்சயம் என்னைவிட மூத்தவர். சிமென்ட் பெஞ்சில், என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். “யு ஆர் எ ரைட்டர்! எனக்கு எத்தனை வயசு சொல்லுங்க, பார்க்கலாம்!” என்று…