ஒரு கிடாயின் கருணை மனு

ஒரு கிடாயின் கருணை மனு – தமிழ் மண் மணம் மாறாத ஒரு கிராமத்து மக்கள் நிறைஞ்ச ஒரு படம். கல்யாணம் ஆனா, குல தெய்வத்துக்கு ஒரு கிடாயை பலி கொடுக்குறோம்ன்னு வேண்டிகிட்ட ஹீரோ, தன்னோட மனுஷ மக்களோட குல சாமி கோவிலுக்கு ஒரு லாரில போறாரு. போற எடத்துல ஒரு பெரிய விபரீதம் நடந்துருது. அது என்ன பிரச்சனை, அதுல இருந்து எல்லாரும் எப்படி வெளிய வந்தாங்கங்கிறது தான் கதை. கழுகு பார்வையில் கேமரா என்று…

லென்ஸ்

வெற்றிமாறன் தயாரிப்பில் வெறும் திரைப்பட விழாக்களில் வலம் வந்து கொண்டிருந்த படம். பல விஞ்ஞான முன்னேற்றங்கள், புதிய கண்டுபிடிப்புகள், மேல் நாட்டு தரத்தில் மேட்டுக்குடி வாழ்க்கை, எங்கு திரும்பினும் செல்ஃபி, டப்ஷ்மாஷ்ன்னு வேறு எதோ உலகத்தை நோக்கி நாம் பயணப்பட்டுக்கொண்டு இருக்கிறோம். இணையம்!!! நம் கைகளால் நமக்கு தெரியாமல் நம் கழுத்தை நெறிக்கும் ஒரு சாத்தான். அதில் உள்ள நன்மை தீமைகளை தெரியாமல் சரட்டுமேனிக்கு பயன்படுத்தும் போது ஏற்படும் ஒரு விபரீதம் ஒருவனை, அவன் சார்ந்த ஒரு…

பாகுபலி 2

குறிப்பு – ஏன் கட்டப்பா பாகுபலியை கொன்றார் என்ற புதிரை உடைக்க இதை நான் எழுதவில்லை. படம் தரும் பல மயிர் கூச்சரியும் தருணங்களை நீங்களும் ரசிக்க ஒரு துண்டு சீட்டு. அதனால் தைரியமாக முழுவதும் படிக்கலாம். 2 வருஷத்திற்கு பின் பாகுபலி இரண்டாம் பாகம். பிரம்மாண்டமான ஓப்பனிங். பல எதிர்பார்ப்புகள். முக்கியமாக எல்லாரோடும் இருக்கும் அந்த கட்டப்பா கேள்வி. இதை எல்லாத்தையும் அதிகமாவே பூர்த்தி செஞ்சிருக்குது பாகுபலி அண்ட் டீம். முதல்பாகம் முழுவதும் மகன் பிரபாஸ்…

பவர் பாண்டி

தனுஷோட இயக்கத்துல வெளி வந்து இருக்குற படம். படம் எப்படி இருக்குன்னு பாக்குறதுக்கு முன்னாடி, இன்னைக்கு காலைல நான் டிரைன்ல வரும் போது ரெண்டு பசங்க பேசுன உரையாடல பத்தி சொல்லணும். மச்சான், பவர் பாண்டி படத்துக்கு போனேன்டா , காவியம் மச்சான்னு ஒருத்தன் ஆரம்பிச்சான். உண்மையவாடா??, இது இன்னொருத்தன். முதல் ஆளோட முக பாவனை ஒரு கோணகிளி கிண்டுச்சி. என்னடா சொல்லு, படம் எப்படி இருந்தது? ‘படமாடா எடுத்துருக்கான் தனுஷ். ஒரு குப்பைக்கு ஆகாதுடா அது….

காற்று வெளியிடை

குற்றம் கடிதல், தெகிடி, மீகாமன் படங்கள் வரிசையில் பட தலைப்புக்கு அர்த்தம் தேடும் படம். காற்று வெளியிடைக் கண்ணம்மா – நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் என்றார் பாரதியார். அப்படின்னா என்ன? அதை வேறு பதிவில் பார்க்கலாம். படத்துக்கு வருவோம். ஆர் ஃபோர்ஸ் ஃபைட்டர் பைலட்டுக்கும் (Air Force Fighter Pilot) ஒரு டாக்டருக்கும் உள்ள ஈகோ பிரச்சனையே காற்று வெளியிடை. தன்னை மட்டும் பற்றி யோசிக்கும் ஹீரோ, ஒரு மென்மையான பெண்ணை காதலித்தால் என்ன ஆகும்…

கவண்

கவண் – ஜர்னலிசம், டிவி சேனல், ரிப்போர்ட்டர்ன்னு டிரைலர்ல பார்த்தாலே தெரியுது. கே.வி.ஆனந்த் வேற. அப்ப கோ 3 தான்னு நினைச்சி தியேட்டர் போனேன் (கோ 2 டான்னு நீங்க சொல்றது கேக்குது… அது தான் பாபி சிம்ஹா நடிப்புல ஒன்னு கேவலமா வந்துதே…) ஹீரோ எப்பவும் போல நேர்மையான ரிப்போட்டர். டிவி சேனல் முதலாளி எல்லாத்தையும் பிசினெஸ்ஸா பாக்குறவரு. ரெண்டு பேருக்கும் சண்டை. எப்படி ஹீரோ ஜெயிச்சாரு. இந்த ஒன் லைன ரொம்ப சாமர்த்தியமான கையாண்டு…

சி 3

சி 3 – சிங்கம் வேட்டையாடும் 3 ஆவது களம் விசாகபட்டினம். தூத்துக்குடில இருந்து  பஸ் புடிச்சு சென்னை வந்தவரு, ஒரு டிரெயின் ஏறி விசாகபட்டினத்துல இறங்குறாரு. இறங்குன உடனே ஒரு சண்டை. அவள்ளோ பேரையும் புரட்டி எடுக்குறாரு. அங்க ஆரம்பிக்குது சிங்கத்தின் வேட்டை. மருத்துவ கழிவுகள், மின்னணு கழிவுகள், இதுக்கு தான் போராடுறாரு ஹீரோ. சிங்கம் 1,2 மாதிரி, இந்த படத்துலயும் திரைக்கதைல எந்த தொய்வும் இல்ல. ஹீரோ பண்ற எல்லா காரியங்களுக்கும், கூடவே இயக்குனர் நியாயம்…

கடவுள் இருக்கான் குமாரு…

கடவுள் இருக்கான் குமாரு – ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறதையும், ராஜேஷ் படம் எடுக்கறதையும் விட்டுட்டா… சத்தியமா கடவுள் இருக்கான் குமாரு.   அடுத்த படத்துல சந்திப்போம், அன்புடன் பிரதீப்.

அச்சம் என்பது மடமையடா

அச்சம் என்பது மடமையடா – கௌதம், சிம்பு, ரஹ்மானோட அடுத்த காம்போ படம். பயங்கர எதிர் பார்ப்புகள். முதல் பாதில மஞ்சிமாவோட ரொமான்ஸ் பண்ண முயற்சி பண்ற சிம்பு, இரண்டாம் பாதில 2 துப்பாக்கியை வச்சி அச்சம் இல்லாம எல்லாத்தையும் சுட ஆரம்பிக்கறாரு. கடைசில எல்லாரும் என்ன ஆனாங்க என்பது தான் அச்சம் என்பது மடமையடா. முதல் பாதி ரொமான்ஸ்ல கௌதம் அப்லாஸ் வாங்குறார். மஞ்சிமாவும் சிம்புவும் ஓரக்கண்ணால் ரசிச்சிக்கிற எல்லா சீன்ஸுமே அழகு. ரெண்டு பேரும்…

ரெமோ

ரெமோ – SK ஆண்ட் KS நடிச்சிருக்காங்க. அட அப்படி தாங்க படத்துல காட்டுறாங்க. படத்துல சஸ்பென்ஸ்ன்னா ஒன்னும் கிடையாது. ஹீரோ லவ்விங், பொம்பள வேஷம், ஹீரோயின் நாட் லவ்விங், அப்பறம் லவ்விங், ஒரு ஃபைட்டிங், அப்பறம் டும் டும், டும். இதே புளிச்ச மாவு கதை தான். புதுசா சொல்லனும்னா சிவா நர்ஸ் வேஷம். காதல் மன்னன், அவ்வை ஷண்முகி, சேத்து ஒரு கலவையா கொடுத்துருக்காரு இயக்குனர் பாக்யராஜ். படத்த 2 பேர் தூக்கி நிறுத்துறாங்க….

MS தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி

MS தோனி – கிளைமாக்ஸ் என்னன்னு தெரிஞ்சு நாம போய் பாக்குற படம் தான் தோனி, தி அன்டோல்ட் ஸ்டோரி. கோல் கீப்பர் முதல் 2011 கிரிக்கட் உலக கோப்பை வரை தோனியோட பயணம் தான் இந்த படம். தோனி வாழ்க்கையில கடந்த தடைகள், பிரச்சனைகள், ஊக்கு விச்ச விளையாட்டு ஆசிரியர், உதவிய நண்பர்கள், தட்டி கொடுத்த உயர் அதிகாரி, கனவை நோக்கி பயணப்படுத்தல்ன்னு நிறைய அழகான சீன்ஸ் படத்துல. இந்த எல்லா தருணத்தையும் தோனி கூட…

ஆண்டவன் கட்டளை

ஆண்டவன் கட்டளை – காக்க முட்டை மணிகண்டனோட 3ஆவது படம். ஒரு பொய் சொன்னா, அதை மறைக்க, நிறைய பொய் சொல்ல வேண்டி வரும். இந்த ஒன் லைனை மையமா வச்சி, ஒரு பாஸ்போர்ட் வாங்குற பிரச்சனையை அழகான திரைக்கதைல சொல்ற படம் தான் ஆண்டவன் கட்டளை. ஜஸ்ட் லைக் தாட் விஜய் சேதுபதி ஸ்கோர் பண்றாரு. ஊமையை நடிக்கும் போதும், வீடு தேடும் போதும், பிரிட்டிஷ் எம்பசில, கோர்ட்ல ன்னு ஒரு ஒரு ரியாக்ஷன்ல ஒரு…