சரித்திர நாவல்களின் அரசர்… (Historical Novels Kings)

இவரை சரித்திர நாவல்களின் அரசர் என்று சொன்னால் அது மிகை ஆகாது. அழகு நடை, அட்டகாசமான உவமைகள், பிரம்மாண்ட படைப்புன்னு இவர் செதுக்கிய பார்த்திபன் கனவு, சிவாகமியின் சபதம், பொன்னியின் செல்வன் நாவல்கள், தமிழ் உலகின் முக்கியப் படைப்புகள். எக்கச்சக்க முடிச்சுகள், ஆழ்வார்க்கடியான், நந்தினி, சேந்தன் அமுதன், மந்தாகினி, பூங்குழலி என்று கற்பனை கதாபாத்திரங்கள் கொண்டு இவர் தீட்டிய பொன்னியின் செல்வன் நாவல் இன்றைக்கும் புகழ் பெற்றதாக திகழ்கிறது. தமிழ் புத்தகம் வசிப்பவர்கள் தங்கள் வாழ்வில் ஒரு…

வேல்ஸ் இளவரசி…

ஒரு புகைப்பட கும்பலில் இருந்து தப்பிக்க முயற்சிக்க, அது இளவரசி டயனாவின் மரணத்திற்கு வித்திட்டது. 18 வருஷத்துக்கு முன்னாடி, சின்ன வயசுல சன் டிவி நியூஸ்ல பார்த்த அந்த காட்சி இன்னும் ஞாபகம் இருக்கு. அந்த வேல்ஸ் இளவரசி மரணத்தை தொட்ட தினம் இன்று. காலம் கடந்தாலும் இன்னும் நம்மிடயே, “இவ பெரிய இளவரசி டயானா?” வாசகம் உயிரோடு தான் இருக்கு… ‪#‎Diana‬ ‪#‎Princess_of_Wales‬

டாக்டர் அப்துல் கலாம் ஐயா…

டாக்டர் அப்துல் கலாமிடம்…. ”உங்களின் கல்லூரிக் காலத்தில், உங்களோடு படித்தவர் எழுத்தாளர் சுஜாதா, அவருடனான உங்களின் நினைவுகளை எங்களிடம் பகிர்ந்துகொள்ளலாமே?” ”நானும் சுஜாதாவும் எப்போதும் முதல் பெஞ்சில் அமர்ந்து இருப்போம். ஆசிரியர் கேள்வி கேட்டு முடிப்பதற்கு முந்தியே நாங்கள் முந்திக்கொண்டு, எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிப்பதால், எங்களுக்கு முந்திரிக்கொட்டை என்று பெயர். சுஜாதா என் இனிய நண்பர்!” கனவு காணுங்கள்- டாக்டர் அப்துல் கலாம் ஐயா… தூங்கிக் காண்பதல்லை கனவு; நம்மை தூங்க விடாததே கனவு… மாணவ-…

ரோஜா அரும்பு…

ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ என்ற பெண்மணி . கோன்ஜா என்றால் அல்பேனிய மொழியில் ரோஜா அரும்பு என்று பொருள். 18 வயது முதல் தனது வாழ்நாள் முழுவதும், சமுக சேவைக்காகவே அர்பணித்த ஒரு நல்ல உள்ளம். ஏழை மக்களின் வாழ்க்கை தரம் உயர, தொழுநோயாளிகள், காச நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தன்னுடைய இறுதி மூச்சு வரை உழைத்தவர். அது வேறு யாரும் அல்ல, அமைதிக்கான நோபல் பரிசு வென்ற, பாரத் ரத்னா, அன்னை தெரசா அவர்கள். அந்த ரோஜா…

தன்னலமற்ற தலைவர்… (King Maker)

நடிக்க வந்தவர்கள் எல்லோரும் சிவாஜியிடம் சிலதைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். பாட வந்தவர்கள் எல்லோரும் எஸ்.பி.பி யிடம் சிலதைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். நல்ல டைரக்டர்கள் எல்லோரும் பாலச்சந்தரிடம் சிலதைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். எழுத வந்தவர்கள் எல்லாரும் சுஜாதாவிடம் சிலதைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். அரசியலுக்கு வருகிறவர்கள் யாருமே ஏன் பெருந்தலைவர் காமராஜரிடம் எதுவுமே கற்றுக் கொள்வதில்லை? ‪#‎HappyBirthday‬ ‪#‎Kingmaker‬ ‪#‎Kamarajar‬

தந்தி…

தந்தி, ஒரு தகவல் பரிமாறும் ஊடகம் என்பதை மறந்த நம் இடையில் உலவும் ஒரு அமங்கல சொல். இக்கால தலைமுறைக்கு வெறும் வார்த்தயாக தெரிந்த ஒரு ஊடகம். அடுத்த தலைமுறையினரின் அருங்காட்சியக சொல். START IMMEDIATELY!!! என்பதயே அநேக நேரம் சும்ந்து சென்றது. தனது வாழ்நாளில் எவளவோ நல்ல விஷயங்களை உடனே பகிர உதவிய தந்தி இப்பொழுது மரண தருவாயில். 160 ஆண்டுகள் வாழ்ந்த இந்த ஊடகம் வரும் ஜூலை 16 ஆம் தேதி செயற்கை எய்துகிறது.!!!…