ஆயுத பூஜை

ஆயுத பூஜை வந்துட்டா போதும், வீட்ல பல வருஷமா சும்மா இருக்குற சைக்கிளுக்கு கூட ஒரு பொட்டு வச்சி, ஒரு மாலை போட்டு, அதை சந்தனத்துல குளிக்க வச்சி… பாடா படுத்திருவோம். அந்த சைக்கிளே நம்மள பாத்து, டேய், நான் பாட்டுக்கு ஒரு மூலைல தானேடா இருந்தேன். என்னைய ஏன்டா புதுசா ஷோ ரூம்ல எடுத்த வண்டி மாதிரி ஆக்கி வச்சிருக்கே? முதல்ல என் டயருக்கு காத்து அடிடான்னு சொல்லும். ஆயுத பூஜை யாரு கொண்டாடணும் தெரியுமா……

நாய்க்கு உணவு

இன்று காலை ஒரு பூங்காவில், அதன் காப்பாளர் தனது வளர்ப்பு நாய்க்கு பிஸ்கட் துண்டுகளை போட்டுக் கொஞ்சிக்கொண்டிருந்தார். அதை பார்த்த, அந்த நாயின் சகாக்கள், அந்த பிஸ்கட் துண்டுகளை அதனுடன் பகிர்ந்துகொள்ள வந்தது. அதை பார்த்த, பூங்கா காப்பாளர், கடும் கோவம் கொண்டு மற்ற நாய்களை விரட்டினார். “ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தா, தன் பிள்ளை தானே வளரும்ங்கிறது” மாதிரி, தெரு நாய்க்கு பிஸ்கட் போட்டா, தன் நாய்க்கு தானே பிஸ்கட் கிடைக்காதா என்ன…?

OLX 6 month BreakUp Challenge

olxல 6 மாசம் பிரேக் அப் சேலஞ்ன்னு ஒன்னு டி.வில பார்த்தேன். 6 மாசமா பயன்படுத்தாத பொருட்களை வித்துருங்கன்னு அதுல சொன்னாங்க… சரி, அப்ப என்னோட 6 மாசம் பயன்படுத்தாத சாக்ஸை வித்தரலாம்ன்னு, கஸ்டமர் கேர்க்கு ஃபோன் பண்ணி கேட்டேன். அதே கேட்டுட்டு உடனே ஃபோன கட் பண்ணிட்டான். அப்படி என்ன நான் தப்பா கேட்டுட்டேன்…!!!!

அபத்தங்கள்…

கமல் டிவிட்டரில் பதிவிடுவதன் நோக்கம் என்ன? தனது கருத்தை சொல்வதற்க்கா…!!! இல்லை, அந்த பதிவு யாருக்கும் புரிய கூடாது, அப்ப தான் நம்மள பத்தி பேசிட்டு இருப்பாய்ங்க என்பதற்கா…!!! இதுல எதோ புரிஞ்சு மாதிரி 5000 பேர் லைக்ஸ் வேற… அதும் இன்னைக்கு போட்ட பதிவுல தெளிவா வார்தைய உச்சரிக்க ஏதுவா ஆபாச வார்தையோடு…

அம்மா…

​I asked my mom why computers are so smart? Mom replied, Computer listens to the motherboard… அம்மான்னா சும்மா இல்லடா…  yoursapradeep.wordpress.com

​குடியரசு தினம் 2017

​குடியரசு தினத்த கறுப்பு தினமா அனுசரிக்கிறதுனா ஓ.கே. முதல்ல சுதந்திர தினத்துக்கும், குடியரசு தினத்துக்கும் வித்தியாசம் தெரியுமா…?? #yoursapradeep.wordpresss.com

பஸ்…

நல்ல போயிட்டு இருந்த பஸ், குலுங்கி குலுங்கி போனா, நாம பஸ் ஸ்டாண்ட் உள்ள வந்துட்டோம்ன்னு அர்த்தம்…

பிறந்தது புத்தாண்டு… 2017…

ஒரு விஷயத்தை உருப்படியா பண்ணனும்ன்னு நினைக்கிறவன் ஜனவரி 1ஆம் தேதி வரை காத்து இருக்க மாட்டான். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்… அன்புடன், பிரதீப்.

God is writing my love story

God is writing my love storyன்னு ஒரு கும்பல் சுத்திட்டு இருந்துதே… 2016 முடிஞ்சு, 2017 வர போகுது, இன்னமுமா எழுதுறாரு கா(gaa)டு… #yoursapradeep.wordpress.com

பதருகலா…

சசிகலா வாய்ஸ் எப்படி இருக்கும், பேச சொல்லுங்கன்னு ஒரு கும்பல் திரியுது… இங்க என்ன தமிழகத்தின் செல்ல குரலுக்கான தேடலா நடக்குது… அட பதருகலா…

குல்லா…

சாண்ட்டா க்லாஸ் தொப்பிய க்ரிஸ்த்மஸ்க்கு வித்தா, இங்க பெங்களூருல குளுருக்கு குல்லாவா யூஸ் பண்றாய்ங்க… #yoursapradeep. wordpress.com

அழகு

அக அழகு புற அழகை விட மேலானது என்று எல்லோரும் நினைத்திருந்தால், ஜிம்மில் இவ்வளவு கூட்டமும், நூலகம் வெருச்சோடியும் இருந்திருக்காது… #yoursapradeep.wordpress.com