லென்ஸ்

வெற்றிமாறன் தயாரிப்பில் வெறும் திரைப்பட விழாக்களில் வலம் வந்து கொண்டிருந்த படம். பல விஞ்ஞான முன்னேற்றங்கள், புதிய கண்டுபிடிப்புகள், மேல் நாட்டு தரத்தில் மேட்டுக்குடி வாழ்க்கை, எங்கு திரும்பினும் செல்ஃபி, டப்ஷ்மாஷ்ன்னு வேறு எதோ உலகத்தை நோக்கி நாம் பயணப்பட்டுக்கொண்டு இருக்கிறோம். இணையம்!!! நம் கைகளால் நமக்கு தெரியாமல் நம் கழுத்தை நெறிக்கும் ஒரு சாத்தான். அதில் உள்ள நன்மை தீமைகளை தெரியாமல் சரட்டுமேனிக்கு பயன்படுத்தும் போது ஏற்படும் ஒரு விபரீதம் ஒருவனை, அவன் சார்ந்த ஒரு…

சில நேரங்களில் சில மனிதர்கள்

1972 ஆம் ஆண்டு ஜெயகாந்தனுக்கு சாஹித்ய அகாடமி விருதை பெற்றுத்தந்த நாவல். ஜெயகாந்தன் எழுத்துக்களில் ஈர்க்கப்பட்டவர்கள் மறக்காமல் வசித்து இருக்கும் ஒரு புத்தகம். இந்த நாவலுக்கு 2 வித்தியாசமான குணங்கள் உண்டு. ஒன்று, ஜெயகாந்தனின் அக்கினிப் பிரவேசம் சிறுகதை பற்றி கேள்வி பட்டு இருப்பீர்கள். 1960 களில் வெளி வந்த இந்த சிறு கதை பல விமர்சனத்திற்கு ஆளாக்கப்பட்டது. நல்ல மழை, ஒரு பெண் பேருந்திருக்காக காத்திருக்கிறாள். துணைக்கு அந்த பேரூந்து நிறுத்துமிடத்தில் ஒரு மாடு மட்டும்…

சுஜாதா…!!!

இன்று என் இனிய எழுத்தாளனுக்கு பிறந்த நாள். ஒரு பெயர், அதன் பின்னால் நிரந்தர ஆச்சிரியக்குறி… சுஜாதா… ! எனக்கு அலுவலக பிறந்த நாள் () இன்று தான். இன்று சுஜாதாவின் பிறந்தநாள் என்று நான் உணர்ந்த பிறகு தான், இன்று எனக்கும் பிறந்த நாள் என்றே நான் உணர்ந்தேன். இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் எனக்கும் என் இனிய எழுத்தாளனுக்கும்… நான் ரசித்த அவரின் ஒரு நகைச்சுவை துணுக்கு உங்கள் பார்வைக்கு: ஸ்ரீரங்கம் மருத்துவமனை staff…

பாகுபலி 2

குறிப்பு – ஏன் கட்டப்பா பாகுபலியை கொன்றார் என்ற புதிரை உடைக்க இதை நான் எழுதவில்லை. படம் தரும் பல மயிர் கூச்சரியும் தருணங்களை நீங்களும் ரசிக்க ஒரு துண்டு சீட்டு. அதனால் தைரியமாக முழுவதும் படிக்கலாம். 2 வருஷத்திற்கு பின் பாகுபலி இரண்டாம் பாகம். பிரம்மாண்டமான ஓப்பனிங். பல எதிர்பார்ப்புகள். முக்கியமாக எல்லாரோடும் இருக்கும் அந்த கட்டப்பா கேள்வி. இதை எல்லாத்தையும் அதிகமாவே பூர்த்தி செஞ்சிருக்குது பாகுபலி அண்ட் டீம். முதல்பாகம் முழுவதும் மகன் பிரபாஸ்…

Microsoft Recruitment… 

​Bill Gates அவரது Microsoft நிறுவனத்திற்கு ஒரு புதிய Chairman பதவிக்கு ஆள் எடுக்க 5000 நபர்களை Interview எடுக்க வரவழைத்தார்.. அனைவரும் ஒரு பெரிய அறையில் ஒன்று கூடினர்… இதில் நமது ஊரைச்சேர்ந்த ராமசாமியும் அடக்கம்… Bill Gates : “ Thank you for coming…. Those who do not know JAVA may leave for the day…. “ JAVA தெரியாதவங்கள போக சொன்னதும் 2000 பேர் அந்த இடத்தை…

பவர் பாண்டி

தனுஷோட இயக்கத்துல வெளி வந்து இருக்குற படம். படம் எப்படி இருக்குன்னு பாக்குறதுக்கு முன்னாடி, இன்னைக்கு காலைல நான் டிரைன்ல வரும் போது ரெண்டு பசங்க பேசுன உரையாடல பத்தி சொல்லணும். மச்சான், பவர் பாண்டி படத்துக்கு போனேன்டா , காவியம் மச்சான்னு ஒருத்தன் ஆரம்பிச்சான். உண்மையவாடா??, இது இன்னொருத்தன். முதல் ஆளோட முக பாவனை ஒரு கோணகிளி கிண்டுச்சி. என்னடா சொல்லு, படம் எப்படி இருந்தது? ‘படமாடா எடுத்துருக்கான் தனுஷ். ஒரு குப்பைக்கு ஆகாதுடா அது….

காற்று வெளியிடை

குற்றம் கடிதல், தெகிடி, மீகாமன் படங்கள் வரிசையில் பட தலைப்புக்கு அர்த்தம் தேடும் படம். காற்று வெளியிடைக் கண்ணம்மா – நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் என்றார் பாரதியார். அப்படின்னா என்ன? அதை வேறு பதிவில் பார்க்கலாம். படத்துக்கு வருவோம். ஆர் ஃபோர்ஸ் ஃபைட்டர் பைலட்டுக்கும் (Air Force Fighter Pilot) ஒரு டாக்டருக்கும் உள்ள ஈகோ பிரச்சனையே காற்று வெளியிடை. தன்னை மட்டும் பற்றி யோசிக்கும் ஹீரோ, ஒரு மென்மையான பெண்ணை காதலித்தால் என்ன ஆகும்…

OLX 6 month BreakUp Challenge

olxல 6 மாசம் பிரேக் அப் சேலஞ்ன்னு ஒன்னு டி.வில பார்த்தேன். 6 மாசமா பயன்படுத்தாத பொருட்களை வித்துருங்கன்னு அதுல சொன்னாங்க… சரி, அப்ப என்னோட 6 மாசம் பயன்படுத்தாத சாக்ஸை வித்தரலாம்ன்னு, கஸ்டமர் கேர்க்கு ஃபோன் பண்ணி கேட்டேன். அதே கேட்டுட்டு உடனே ஃபோன கட் பண்ணிட்டான். அப்படி என்ன நான் தப்பா கேட்டுட்டேன்…!!!!

திதி

திதிகள் மொத்தம் 15. பிரதமையில் ஆரம்பித்து, அமாவாசை/பௌர்ணமி வரை 15 நாட்களுக்கும், ஒரு ஒரு திதி. இது அனைவரும் அறிந்ததே. ஆனால், நம் வீட்டில், 8ஆம் திதியான அஷ்டமியிலும், 9ஆம் திதியான நவமியிலும் எந்த சுப காரியங்களையும் செய்ய மாட்டார்கள். இது எல்லாரும் அவர்கள் வீட்டில் கவனித்திருக்கக்கூடும். இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான அஷ்டமியும், நவமியும் மகாவிஷ்ணுவிடம் போய் முறையிட்டனராம். நாங்களும் எல்லா திதி போல தானே. ஏன் மக்கள் எங்கள் நாட்களில் சுப நிகழ்வுகள் எதும்…

காதல் கியூபிட்

இந்த காலத்து இளைஞர் இளைஞிகளிடம் ரொம்ப பிரபலமான ஒரு மனுஷனா அது கியூபிட் தான். ஒரு கும்பல், டேய், டப்பா தலையா உன்ன தான்டா ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன். என்ன பாத்தானா உனக்கு ஆளா தெரிலயா, ஒரு அம்பு விட்ட கொறஞ்சா போயிருவேன்னு தேடிட்டு இருக்கு. இன்னொரு கும்பல், டேய்…! விளக்கெண்ணெய், உன்னால தான்டா இவளோ பிரச்சனையும், கைல மாட்டுன, நீ அவளோ தான்டான்னு கொலை வெறியுடன் தேடிட்டு இருக்குது. இப்ப ஏன் நீ சம்பந்தம் இல்லாம…

கவண்

கவண் – ஜர்னலிசம், டிவி சேனல், ரிப்போர்ட்டர்ன்னு டிரைலர்ல பார்த்தாலே தெரியுது. கே.வி.ஆனந்த் வேற. அப்ப கோ 3 தான்னு நினைச்சி தியேட்டர் போனேன் (கோ 2 டான்னு நீங்க சொல்றது கேக்குது… அது தான் பாபி சிம்ஹா நடிப்புல ஒன்னு கேவலமா வந்துதே…) ஹீரோ எப்பவும் போல நேர்மையான ரிப்போட்டர். டிவி சேனல் முதலாளி எல்லாத்தையும் பிசினெஸ்ஸா பாக்குறவரு. ரெண்டு பேருக்கும் சண்டை. எப்படி ஹீரோ ஜெயிச்சாரு. இந்த ஒன் லைன ரொம்ப சாமர்த்தியமான கையாண்டு…

ஹெலிகாப்ட்டர் வெர்ஷன் நீயா நானா

போன வாரம் நீயா நானா ஷோல ஒரு பொண்ணு என் மாப்பிள்ளையும், நானும் கல்யாண மண்டபத்துக்கு ஹெலிகாப்ட்டர்ல வரணும்ன்னு சொல்ல, அது நெட்டிசன்களுக்கு ஒரு வாரம் பெரிய தீனி. அந்த நிகழ்ச்சியை முழுமையா பார்த்த விட வேண்டும் என்று பெரிய போராட்டத்திற்குப்பின் அந்த நிகழ்ச்சியின் இணைப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியை எத்தனை பேர் முழுமையாக பார்த்தார்கள் என்று தெரியவில்லை. நம் நெட்டிசன்கள் போடும் மீம்ஸ் எல்லாம் முதல் 15 நிமிடம் அந்த பெண்கள் பேசியதை பற்றியதை மட்டும்…