உலகப்புகழ்பெற்ற மூக்கு

உலகப்புகழ்பெற்ற மூக்கு வைக்கம் முகமது பஷீர் அவர்களின் ஒரு சிறுகதை தொகுப்பு. பொதுவாக, சிறுகதை தொகுப்புகளை தொகுக்கும் தொகுப்பாளர்கள், அந்த தொகுத்த புத்தகத்திற்கு பெயர் வைப்பதில்லை. அந்த தொகுப்பில் உள்ள ஒரு புகழ்பெற்ற ஒரு கதையின் பெயரையே வைப்பார்கள். அந்த வகையில் சுஜாதாவின் சிறுகதை எழுதுவது எப்படி? புத்தகமொரு சான்று. சரி, விஷயத்திற்கு வருவோம். சுமார் மூன்றாண்டுகளுக்கு முன்னர் புதுயுகம் தொலைக்காட்சியில் காலை வேளைகளில் ‘இனியவை இன்று’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் (இப்பொழுதும் வருகிறதே என்று நீங்கள்…

சினிமாவுக்கு போன சித்தாளு

ஜெயகாந்தன் சிறுகதையாய் எழுத வேண்டும் என்று நினைத்து ஒரு சிறு கதை புத்தகமாக எழுதிய கதை. பெயர் வசீகரமாக இருக்கிறதல்லவா? “ஒரு பெண்…, சித்தாள் வேலை பார்ப்பவள்…, சினிமா பார்க்க போனாள்…!!!” இது தானே தலைப்பிலிருந்து நாம் பெறும் விஷயம்? சரியே… அதை ஒட்டியே அமைகிறது கதை. இன்னமும் நாம் வலைத்தளங்களில், இரண்டு ஹீரோக்களுக்காக ரசிகர் பட்டாளம் அடித்து கொண்டுதான் இருக்கிறது. முதல் நாள் காட்சிகளை பார்க்க, கூட்டம் அலைமோததான் செய்கிறது. பால் அபிஷேகங்கள் அரங்கேறுகிறன்றன. இதெல்லாம்…

14 நாட்கள்

சுஜாதாவின் 100 பக்கமே உள்ள ஒரு கதை. 1972 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானிற்கும் நடந்த 14 நாள் போரை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கதை. இந்திய விமானப்படை ஸ்க்வார்டரன் லீடர் குமார் கிழக்கு பாகிஸ்தானான பங்களாதேஷில் குண்டு வீச செல்கிறான். அவனது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு எதிரிகளின் முகாமில் சிறைபிடிக்கப்படுகிறான். இந்தியர்களை முழுவதுமாக வெறுக்கும் ஒரு பாகிஸ்தானிய ராணுவ அதிகாரியிடம் மாட்டிக்கொள்ளும் அவன் கதி என்ன ஆகிறது என்பதை சுஜாதா அவர் பாணியில் 102 ஆவது…

சில நேரங்களில் சில மனிதர்கள்

1972 ஆம் ஆண்டு ஜெயகாந்தனுக்கு சாஹித்ய அகாடமி விருதை பெற்றுத்தந்த நாவல். ஜெயகாந்தன் எழுத்துக்களில் ஈர்க்கப்பட்டவர்கள் மறக்காமல் வசித்து இருக்கும் ஒரு புத்தகம். இந்த நாவலுக்கு 2 வித்தியாசமான குணங்கள் உண்டு. ஒன்று, ஜெயகாந்தனின் அக்கினிப் பிரவேசம் சிறுகதை பற்றி கேள்வி பட்டு இருப்பீர்கள். 1960 களில் வெளி வந்த இந்த சிறு கதை பல விமர்சனத்திற்கு ஆளாக்கப்பட்டது. நல்ல மழை, ஒரு பெண் பேருந்திருக்காக காத்திருக்கிறாள். துணைக்கு அந்த பேரூந்து நிறுத்துமிடத்தில் ஒரு மாடு மட்டும்…

நீலப்படம்

நீலப்படம் – பெயர் வித்தயாசமாக யோசிக்க வைக்கின்றது அல்லவா? அதுதான் இந்த புத்தகத்தின் திறவுகோல். எனக்கு இந்த புத்தகத்தை அறிமுகப்படுத்தியது விகடன். பெண்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய 5 புத்தகங்கள் என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஒரு கட்டுரையில் இடம்பிடித்த புத்தகம். பெயரைப் பார்த்தவுடன் யோசிக்க வேண்டாம். ஒரு தைரியமான முயற்சி. நடிகைகளும் பெண்கள்தான் என்பதை, எழுத்தும் உணர்வுமாக எழுதியுள்ள புத்தகம் இது. ஒரு ‘பி’ கிரேடு பட நாயகியின் வாழ்க்கையை மையமாக வைத்து வரையப்பட்டுள்ள கதை. ஆனந்தியின் ஆசைகள்,…

பிரிவோம் சந்திப்போம் 2

பிரிவோம் சந்திப்போம் 2 – பிரிவோம் சந்திப்போம் முதல் பாகத்தில் மதுவும், ரகுவும் பிரிந்ததாக கதை முடிந்தது. நான் முந்தய பதிவில் சொன்ன மாதிரி, அதன் இரண்டாவது புத்தகம் அவர்கள் மீண்டும் சந்திக்கிறார்கள். பாபநாசத்துல கட் பண்ணி, ஓபன் பண்ண பள பளக்குது நியூயார்க் நகர கென்னடி விமான நிலையம். ரகு (டைப் பண்ணும் போது ராகுன்னு தான் வருது. இங்கயும் அது தொடருதுன்னு தான் சொல்லணும்) தனது மேல்படிப்பிற்காக, அப்பாவின் ஆசைக்காக, ‘தன்னாலயும் வாழ்த்துக்காட்ட முடியும்’, அவர்கள்…

மெர்க்குரிப் பூக்கள்

எழுத்தாளர் பாலகுமாரனோட ரொம்ப புகழ் பெற்ற நாவல். அவருடைய பல நாவல்களின் தளமான ஒரு தொழிற்சாலையின் யூனியன் பிரச்சனை, அதை சார்ந்த தொழிலாளர்களின் குடும்ப சூழலை தான் இந்த நாவலிலும் கையில் எடுத்திருக்கிறார். அழகாக ஒரு கணவன் மனைவி அறிமுகத்தோடு தொடங்கும் நாவல், அவர்களை சார்ந்த சுகங்களோடு நகரும் என்ற எதிர்பார்ப்பை சுக்குநூறாக்குகிறது. கணவன் கொலை செய்யப்படுகிறான். எதற்க்காக கொலை செய்யப்படுகிறான்? அவன் உயிர் பலி அவன் குடும்பத்தை தவிர்த்து யாரை எல்லாம் பாதிக்கின்றது, அவன் உயிர் போனதற்கு ஒரு…

பிரிவோம் சந்திப்போம்

பிரிவோம் சந்திப்போம் – சுஜாதாவோட ஒரு பிரபலமான புத்தகம். பெயரின் வசீகரமும் அதற்கு காரணமாக இருக்கலாம். கதையை வாசீக்க ஆரம்பித்த உடன், இவையெல்லாம் ஏற்கனவே பார்த்த இடத்திலும், பார்த்த நிகழ்வுகளாகவும் இருக்கிறதே என்று தோன்றியது. அதற்கு முதல் காரணம், கதை முழுக்க பாபநாசம், அப்பர் டாம், தாமிரபரணி ஆறு, பாண தீர்த்தம், திருநெல்வேலி ரயில் நிலையம் என்று நகர்வது தான். எனக்கு அம்பாசமுத்திரம் என்பதினால் (அம்பாசமுத்திரம், பாபநாசத்தில் இருந்து 10 கி.மீ.) இந்த இடங்கள் பரிச்சயம். இரண்டாவது…

கிருஷ்ணா கிருஷ்ணா

கிருஷ்ணா கிருஷ்ணா – இந்த வார இறுதியில் நான் படித்து முடித்த புத்தகம். கண்ணனை, சம கால நிகழ்வுகள், ஆராய்ச்சிகள், அறிவியல் உண்மைகளோடு ஒப்பிட்டு எழுதி இருக்கிறார் இந்திரா பார்த்தசாரதி. இந்த நூற்றாண்டின் ஒரு சிறந்த படைப்பாகவே இது வரை இந்த நாவல் பார்க்கப்படுகிறது. கிருஷ்ணனின் யாதவர் குலம் நாசமாகிறது. கிருஷ்ணனும் இறக்கும் தருணம். கிருஷ்ணன் எப்படி இறக்க போகிறான் ?, யாரால் ?, அவன் இறந்து விட்டால் என்ன ஆகும், அவன் இறந்த செய்தியை யார் நமக்கு…

தாயுமானவன்

தாயுமானவன் பாலகுமாரனின் ஒரு அற்புத நாவல். நாவலின் தலைவனுக்கு வேலை போகிறது. அதற்கு காரணம் அவன் “தலைவனாக (அலுவலகத்திலும்)” இருப்பதால் தான். ஒரு வருடம் வீட்டிலேயே முடங்கி கிடைக்கிறான். வீட்டில் இருக்கும் பிரச்சனைகள், குழந்தை வளர்ப்பு, சமையல் எல்லாம் கற்றுக்கொள்கிறான். அந்த ஒரு வருடம் அவனுக்கு பல பாடங்களை கற்றுக்கொடுக்கிறது. ஒரு வருடம் கழித்து அவன் குடும்பமும், அவனும் என்ன ஆகிறர்கள் என்பதை அழகாக சொல்லி முடிக்கிறார் பாலகுமாரன். குடும்ப உறவுகளை கை ஆள்வதில் பாலகுமாரனுக்கு ஆளுமை…