எனது பாட்டன்

இன்று 11-12-2017. 12-12-2017 என்ற தேதியில் வரும் நினைவு கூட நம்மில் பல பேருக்கு இன்றைய தேதியை பார்த்து வருவதில்லை அல்லவே? வெறும் பாடபுத்தகத்தில் மனனம் செய்த சாதாரண தேதியாக போய்விட்டது. நாட்காட்டியை கிழிக்கும் போது சில பேர் கவனித்திருக்கக்கூடும். இன்று நம் பாட்டனார் மகாகவியின் பிறந்த நாள். ஆம், இளம் வயதில் தமிழ் இலக்கிய பணி செய்து, அனைவருக்கும் விடுதலை வேட்க்கை தூண்டி, பல அற்புத படைப்புகளை படைத்த மீசை முறுக்கிய எம் மகாகவியின் பிறந்த…

சரித்திர நாவல்களின் அரசர்… (Historical Novels Kings)

இவரை சரித்திர நாவல்களின் அரசர் என்று சொன்னால் அது மிகை ஆகாது. அழகு நடை, அட்டகாசமான உவமைகள், பிரம்மாண்ட படைப்புன்னு இவர் செதுக்கிய பார்த்திபன் கனவு, சிவாகமியின் சபதம், பொன்னியின் செல்வன் நாவல்கள், தமிழ் உலகின் முக்கியப் படைப்புகள். எக்கச்சக்க முடிச்சுகள், ஆழ்வார்க்கடியான், நந்தினி, சேந்தன் அமுதன், மந்தாகினி, பூங்குழலி என்று கற்பனை கதாபாத்திரங்கள் கொண்டு இவர் தீட்டிய பொன்னியின் செல்வன் நாவல் இன்றைக்கும் புகழ் பெற்றதாக திகழ்கிறது. தமிழ் புத்தகம் வசிப்பவர்கள் தங்கள் வாழ்வில் ஒரு தடவையாவது…

தந்தையர் தினம்

எல்லா வருடமும் ஜூன் மாதம் வரும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் இன்று 18.06.2017. அன்னையர் தினம் போல் இல்லாமல், இதற்கு இன்னும் நம் நாட்டில் எதோ கொண்டாட்டங்கள் கம்மியாகவே இருக்குறது. அன்னையர் தினக்கவிதைகள், வாழ்த்து அட்டைகள், பரிசு பொருட்கள் ஏராளமாக இருப்பதுபோல் ஏன் தந்தையர் தினத்திற்கு இல்லை? நாம் ஏன் நம் தந்தையை கொண்டாடுவதில்லை? பிள்ளை பிராயத்தில் நாம் பார்த்த முதல் கதாநாயகனை ஏன் இப்பொழுது நம்மால் காண முடிவதில்லை? 5…

மகளிர் தினம் 2017

எல்லா வருடமும் மகளிர் தினத்தன்று, மகளிர் பற்றி கண்டிப்பாக எதாவது எழுத வேண்டும் என்று நினைப்பேன். கடந்த வருடம் இலக்கியங்களில், வரலாறுகளில் பெண்களின் மகத்துவம் என்ன என்பதை பற்றி எழுதி இருந்தேன்.  மகளிர் தினம் 2016 அதற்கு முந்தின வருடம், பெண்களுக்கு நடக்கும் வன்கொடுமைகளை பற்றி எழுதி இருந்தேன். (மகளிர் தினம் 2015) முகநூலில், அதை திரும்ப வாசிக்கும் போது, அந்த கொடுமைகள் எதுவும் மாறவில்லை என்பது புலப்படுகிறது . ஒன்றே ஒன்று மாறி உள்ளது. பெண்களின் பெயர்கள்….

உலக தாய்மொழி தினம்

பிப்ரவரி 21, உலக மக்கள் அனைவரும் தங்கள் தாய் மொழியை கொண்டாட யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட நாள் இன்று. வங்கதேச தலைநகர் டாக்காவில் 1952ம் ஆண்டு மொழிக்காக நடந்த போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக ஆண்டுதோறும் பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழிகள் தினமாகக் கடைபிடிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை ரஃபீக்குல் இஸ்லாம் எனும் வங்கதேச அறிஞர் 1998ல் முன்மொழிந்தார். அவரது கோரிக்கையை பரிசீலித்த யுனெஸ்கோ அமைப்பு 1999ம் ஆண்டு இந்த தீர்மானத்தை அங்கீகரித்தது. இதையடுத்து 2000த்திலிருந்து உலக தாய்மொழிகள்…

தை திருநாள்…

தை பிறக்கப்போகிறது. எல்லா வருடமும் போல் இந்த வருடமும் ஜல்லிக்கட்டுக்கு நாம் மல்லுக்கட்டிட்டு தான் இருக்கிறோம். தமிழரோட, தமிழ் கலாச்சாரத்தோட, விவாசியோட ஒரு அழகு பண்டிகையாக பார்க்கப்படும் நாள் தை திருநாள். புத்தாடை உடுத்தி, புது பானையில் பொங்கலிட்டு, கரும்பு கடித்து கொண்டாடும் அற்புதமான பண்டிகையே பொங்கல். அது என்ன பொங்கல் 4 நாள் கொண்டாடப்படுகிறது. எதற்கு ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு பெயர்? போகி முதல் காணும் பொங்கல் வரை. எதற்க்காக இந்த 4 நாள்? யோசித்தது…

எனது முண்டாசு கவி

காலையிலிருந்து நானும் சமூக வலைத்தளங்களில் பார்த்து கொண்டு இருக்கிறேன், நான் எதிர் பார்க்கிற ஒன்றை பற்றி யாரவது எழுத மாட்டார்களா என்று…?!! கேலி, கூத்து, அரசியல், அசிங்கங்கள்ன்னு எவ்வளவோ வருகிறது, வந்து கொண்டு இருக்குறது. சினிமா சார்ந்த பதிவுகள், பிரபலங்களின் பிறந்த நாள் வாழ்த்துன்னு எவ்வளோ வருகிறது. ஆனால், நம் பாட்டனார் மகாகவியின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு பதிவு? ஒரு பாட்டு? ஒரு வரி? ஒரு துளி கூட இல்லை. இதையே நாளை பாருங்கள்…!!! இந்த தலைமுறை…

உலக முதியோர் தினம்…

நம் அன்றாட வாழ்க்கையில் நாம் தினமும் கடந்து போகும் ரயில் நிலையம், டிராஃபிக் சிக்னல், பேருந்து நிலையம், கோவில்கள் முன்னால் நம்மிடம் கையேந்தும் முதியவர்களை பார்க்கும் போது இதயமுள்ள ஒவ்வொருவருக்கும் நெருஞ்சி முள் தைத்தது போல தான் இருக்கும். குடும்ப ஏழ்மை எல்லாம் கடந்து, பிள்ளைகளால் கை விடப்பட்ட பெற்றோர்கள் இன்று தெருக்களில் பிச்சை எடுத்துக்கொண்டோ இல்லை எதோ ஒரு முதியோர் இல்லங்களிளோ தங்கள் பிள்ளைகளின் சிறு பிராயத்தை நினைத்துக்கொண்டு கண்ணீருடன் காலம் தள்ளி கொண்டு இருக்குறார்கள்….

#WorldTranslationDay

இன்று உலக மொழிபெயர்ப்பு தினம். இந்த பதிவை நான் பதிவு செய்ய, நான் உயோகிப்பது மௌண்டைன் வியூவில் எழுதிய அல்காரிதத்தின் பயனால் தான். நான் சொல்வது புரிகிறதா? அது வேறு ஏதும் இல்லை. நம்ம கூகுள் டிரான்ஸ்லேட் தான். “Statistical machine translation” என்னும் மேம்படுத்தப்பட்ட மொழிபெயர்ப்பு முறை மூலம் இயங்கும் கூகுள் டிரான்ஸ்லேட், ஒரு வார்த்தையை மொழி பெயர்க்க கோடி, கோடி கோப்புகள், புத்தகங்கள், மனிதர்களால் மொழிபெயர்க்கப்பட்ட பதிவுகள், வலைத்தளங்களை ஆராய்ந்து செய்கிறது. அதற்க்கு ஏதுவாக…

சுஜாதா – ஒரு ஸ்ரீரங்கத்து நாயகன், மே 03 முதல்

புத்தக வாசிப்பு என்பது சில பேருக்கு அலாதியானது. அந்தப் பழக்கம், வழக்கமாக மாறுனதர்க்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். குடும்ப நபர்கள், நல்ல நண்பன், ஆசிரியர், பக்கத்து வீட்டு அண்ணன், இல்ல, ஒரு நல்ல எழுத்தாளன். சில எழுத்தாளரின் வார்த்தைகளும், மொழி நடையும், உவமைகளும், அவர்கள் புத்தகங்களை படிக்கத்தூண்டிக் கொண்டே இருக்கும். அப்படிப் பட்ட எழுத்தாளர்களின் வரிசையில் சுஜாதாவின் நிலை முன்னிலையே. வகுப்பகளில் புரியாத பல அறிவியல் விதிகளை போற போக்கில் அவருடைய கதை புரிய வைத்து செல்லும்….

உலக புத்தக தினம்

புத்தகம், என் வாழ்வில் எத்தனையோ தருணங்களில் என் தோளோடு தோள் நிற்கும் ஒரு நண்பன். என்னுடைய ஆளுமையை நான் செதுக்க உதவும் ஒரு காரணி. தனிமையில் இருந்து விடுதலை தரும் ஒரு வரம். புத்தக வாசிப்பில் இருக்கும் சுகம், அளப்பரியது. கதையில் லயித்து இருப்பது, கதாபாத்திரமாகவே மாறுவது, ஓர் ஊரில் வாழ்வது, அவன் அழும் போது, நானும் அழுவது என்று எத்தனை எத்தனை சுகங்கள். இக்கால குழந்தைகளுக்கு வீடியோ கேம்ஸ் வாங்கி தராமல், நல்ல புத்தகங்களை வாங்கி…

மகளிர் தினம் 2016

பெண் என்ற கதாபாத்திரம் தமிழ் இலக்கியத்திலும் சரி, புராணங்களிலும் சரி பொறுமை, வீரம், அன்பு, பாசம், நற்பண்பு, போராட்டம், தெளிவுன்னு எவ்வளவோ குணாதிசியங்கள் கொண்டு தான் விளங்கி இருக்கிறது. புறநானூறில் முறத்தால் புலிய அடித்து விரட்டிய பெண், தனது பச்சிளங் குழந்தைக்கு போர் உடை அணிவித்து, போருக்கு அனுப்பும் பெண், ராமாயணத்தில் ராவணன் எதிர் நின்று வீரம் பேசும் சீதை, மகாபாரதத்தில் பாண்டவர்கள் தங்கள் பக்கம் நடக்கும் வீழ்ச்சியினால் துவண்டு போகும் சமயத்தில் எல்லாம், போர் புரியும் அவசியம்…