Microsoftஇல் வேலை

Bill Gates அவரது Microsoft நிறுவனத்திற்கு ஒரு புதிய Chairman பதவிக்கு ஆள் எடுக்க 5000 நபர்களை Interview எடுக்க வரவழைத்தார்.. அனைவரும் ஒரு பெரிய அறையில் ஒன்று கூடினர்… இதில் நமது ஊரைச்சேர்ந்த ராமசாமியும் அடக்கம்… Bill Gates : “ Thank you for coming…. Those who do not know JAVA may leave for the day…. “ JAVA தெரியாதவங்கள போக சொன்னதும் 2000 பேர் அந்த இடத்தை…

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம்…

நான் ஒரு நாள் எனது நண்பருடன், தேநீர் அருந்த சென்றிருந்தேன். தேநீர் அருந்தி விட்டு, அந்த பிளாஸ்டிக் கோப்பையை அவர் கையில் எடுத்தார். “அதை அங்கேயே வைத்து விடுங்கள், இடத்தை சுத்தம் செய்பவர்கள் எடுத்து போட்டு விடுவார்கள்” என்றேன். ஜப்பான்ல மூன்று வருடம் இருந்த பழக்கம்; அதான் அப்படியே தொடர்கிறது என்று குப்பைத் தொட்டியில் எடுத்துப் போட்டார். தனக்கு உள்ள ஒரு வேலையை, இன்னொருவர் மீது சுமத்தும் இந்த குணாதிசயம் நம்முள் எப்படி வந்தது. இது சோம்பேறித்தனமா?…

பெயர்கள்…

நம் வீட்டில் இக்காலத்தில் குழந்தைகளுக்கு எப்படி பெயர்கள் வைக்கிறோம் என்பதை பற்றி ஜெயமோகன் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். நாம் வைக்கும் பெயர்களுக்கு அர்த்தமே தெரியாமல் சம்ஸ்கிருத பெயர்களை வைக்கிறோம். இந்தி வழி சம்ஸ்கிருதச் சொற்கள் வருகையில் அவை உருமாறி நாம் ஏதாவது கேட்கப்போகும் முன் வாயில் விரல்வைத்து ”உஷ்! உஷ்!’ என அதட்டுகின்றன. சுமேஷ், [சும+ ஈஸன்] சுரேஷ் [சுர+ ஈஸன்] கணேஷ் [கண+ஈஸன்] ரமேஷ் [ரம்+ ஈஸன் அல்ல ரம + இஸன்] –…

ஓம் ஸ்ரீ தத்வமஸி…

வார இறுதியில், காலையில் என் வீட்டு அருகில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு போவது எனது வழக்கம். பெங்களுரில் உள்ள கேரளவாசிகளால் நடத்தப்படும் கோவில். பெங்களூர் குளிர் காற்றுடன், எப்பவும் சந்தன மனம் கமழும் அருமையான சாஸ்தா கோவில். பொதுவாக, காலை 10 மணிக்குள் கோவிலுக்கு சென்று விடுவேன். காரணம், அதற்கு மேல் சென்றால், பகல் பூஜைகள் ஆரம்பித்து விடும். அதன் பின், ஐயப்பனை அருகில் சென்று தரிசிக்க சுமார் 45 நிமிடங்கள் ஆகும். காரணம், பூஜை ஆரம்பித்த உடன்…

என்ன படிக்கலாம்

​#Education #WhatToStudy தினசரி தொலைக்காட்சில பார்குற கல்வி சார்ந்த விளம்ப்ரத்துனால எனக்கு ஒரு சந்தேகம். நாம எதுக்காக படிக்கிறோம். அறிவுக்காகவா இல்ல பணத்துக்காகவா. கடைசில எல்லாரும் பணம் பண்ணனும்னு ஒரு புள்ளிய நோக்கி தான் நகர்றோம்ங்கறது ஒரு பக்கம் இருக்கட்டும், ஆனா அறிவுங்கற விஷயத்த பத்தி நாம சிந்திக்கிறதே இல்லையோனு தோணுது. விருப்பப்ட்டு தான் நம்ம கல்வி வழிய நாம தேர்ந்து எடுக்குறோமா? இல்ல பணமும், மதிப்பெண்ணும் மட்டும் அதே முடிவு பண்ணுதா. பத்தாம் வகுப்பு படிச்சு…

பவர் பாண்டி

தனுஷோட இயக்கத்துல வெளி வந்து இருக்குற படம். படம் எப்படி இருக்குன்னு பாக்குறதுக்கு முன்னாடி, இன்னைக்கு காலைல நான் டிரைன்ல வரும் போது ரெண்டு பசங்க பேசுன உரையாடல பத்தி சொல்லணும். மச்சான், பவர் பாண்டி படத்துக்கு போனேன்டா , காவியம் மச்சான்னு ஒருத்தன் ஆரம்பிச்சான். உண்மையவாடா??, இது இன்னொருத்தன். முதல் ஆளோட முக பாவனை ஒரு கோணகிளி கிண்டுச்சி. என்னடா சொல்லு, படம் எப்படி இருந்தது? ‘படமாடா எடுத்துருக்கான் தனுஷ். ஒரு குப்பைக்கு ஆகாதுடா அது….

திதி

திதிகள் மொத்தம் 15. பிரதமையில் ஆரம்பித்து, அமாவாசை/பௌர்ணமி வரை 15 நாட்களுக்கும், ஒரு ஒரு திதி. இது அனைவரும் அறிந்ததே. ஆனால், நம் வீட்டில், 8ஆம் திதியான அஷ்டமியிலும், 9ஆம் திதியான நவமியிலும் எந்த சுப காரியங்களையும் செய்ய மாட்டார்கள். இது எல்லாரும் அவர்கள் வீட்டில் கவனித்திருக்கக்கூடும். இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான அஷ்டமியும், நவமியும் மகாவிஷ்ணுவிடம் போய் முறையிட்டனராம். நாங்களும் எல்லா திதி போல தானே. ஏன் மக்கள் எங்கள் நாட்களில் சுப நிகழ்வுகள் எதும்…

தூக்கம்

தூக்கம், நம் தினசரி வாழ்வில் தவிர்க்க முடியதா ஒரு இயற்கை நிகழ்வு. சரியான, அளவான தூக்கம் எல்லாருக்கும் அவசியம். தூக்கமின்மையே, உடல் பருமன், கோபம், வெறுப்பு, மன அழுத்தம் என்று பல நோய்களுக்கு காரணமாக அமைகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகிறன்றன. நான் இருந்த குடியிருப்பில் தினந்தோறும் இரவு 11 மணிக்கு ஒரு கூர்க்கா விசில் ஊதிக்கொண்டு குடியிருப்பை வளம் வருவார். அந்த விசில் சப்தம் எதோ என் சிறு வயதில் ஒரு வித பயத்தை தந்திருக்கிறது. அந்த விசில்…

விஜய் டிவி சூப்பர் சிங்கர்

விஜய் டிவி சூப்பர் சிங்கர் விளம்பரம். கண் தெரியாத ஒரு சிறுவன். அற்புதமாக பாடுகிறான். அவன் பார்வை பெறுவதற்கு அங்குள்ள பிரபல பாடகர் ஒருவர் தனக்கு தெரிந்த மருத்துவரை தொலைபேசியில் அழைத்து பேசுவது போல் வருகிறது. உண்மையாகவே அந்த பண்பை பாராட்ட வேண்டும். ஆனால் அதற்க்கு ஏன் இவ்வளவு விளம்பரம். வலக்கை கொடுப்பது இடக்கைக்கு தெரிய கூடாது என்று சொல்வார்கள். விஜய் டிவியில் வழக்கமான குரலில் சொல்கிறார் “அவனுக்கு பார்வை கிடைக்குமா?… ஏர்டெல் சூப்பர் சிங்கர், தமிழகத்தின்…

விகடன்

​இன்று விகடன் விருதுகள் சன் டிவியில் ஒளிபரப்பப்படுகிறது. வெறும் சினிமாகாரர்களுக்கான விருது வழங்கும் விழா.  அந்த விளம்பரத்தை பார்த்தவுடன், நான் 10 நாள் முன்னால் படித்த வலைப்பதிவு தான் ஞாபகம் வருகிறது. அதன் லிங்கை கீழே கொடுத்துள்ளேன் நேரம் இருந்தால் படியுங்கள்.  விகடன் மாதிரியான வெகு ஜனங்கள் வாசிக்கும் பத்திரிக்கை சமீப காலமாக அந்த பத்திரிக்கையை வெறுக்க வைத்திருப்பதை நீங்கள் பலர் சொல்லி கேட்டு இருக்கலாம். காரணம் அதில் கொடுக்கப்படும் முக்கியத்துவம்.  நானும் வாரா வாரம் தவராமல்…

பொதுவா சொன்னேன்…

சிவாஜி படத்துல ஒரு சீன் தான் எனக்கு இப்ப ஞாபகம் வருது… ஆபிசர் 1: சிவாஜி செத்துட்டாரு. இந்த லேப்டாப்பை எப்படி ஓபன் பண்ண போறீங்க…? ஆபிசர் 2: சிவாஜி செத்துட்டா என்ன சார்… சிவாஜி மாதிரி பேசுற, சூப்பர் மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட் இருக்காங்க, அவுங்கள வச்சி ஓபன் பண்ணிரலாம். 2 முறை பாஸ்வர்ட் தப்பா சொன்ன உடனே, அந்த எலி ஒரு வைரசை(Virus) காட்டி ஒரு வார்னிங் சொல்லும். இனி ஒரு தடவ தப்பா சொன்னா…

தமிழன் என்று சொல்லடா…

டேய், தமிழ வளக்குறதுக்கு எவ்வளவோ வழிகள் இருக்கு… பேசும் போது, ழ, ள, ல வேறுபாடு தெரிஞ்சு வார்த்தைகளை உச்சரிக்கலாம்… தமிழ் இலக்கியங்கள் படிக்கலாம்… பதினென்கீழ்கணக்கு, மேல்கணக்கு நூல்கள்ல எதாது ஒன்னு படிச்சு, நாலு பேருக்கு சொல்லலாம் (கீழ்கணக்குக்கும், மேல்கணக்குக்கும் வித்தியாசம் வேற பதிவுல சொல்ட்றேன்) இது எல்லம் விட்டுட்டு, தீபாவளிய, தீவாளின்னு சொல்ட்றாங்க… தமிழனா எனக்கு கோவம், கோவமா வருதுன்னு ஒரு வாரமா இவுங்க அக்கப்போர் தாங்கல… #yoursapradeep.wordpress.com